நாட்டில் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்

Published By: Digital Desk 3

28 Aug, 2023 | 08:58 AM
image

நாட்டில் இன்று திங்கட்கிழமை (28) முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்று திங்கட்கிழமை  முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும்  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று (28) மதியம் 12.11 மணியளவில் கோவிலன் முனை மற்றும் மல்லாகம் (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகிய பகுதிகளில் சூரியனின் உச்சம்  மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் 

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

காற்று தென்மேற்கு திசையில் மணிக்கு  25 தொடக்கம் 35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 தொட்டக்கம் 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்கள் வான்பாயும் மட்டத்தை...

2026-08-10 10:50:05
news-image

மாத்தறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குச்...

2026-08-10 10:24:08
news-image

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிர பரவல்:...

2026-08-10 10:10:23
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-08-10 10:01:27
news-image

ஹெட்டிபொலவில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை...

2026-08-10 09:53:53
news-image

தெஹிவளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை...

2026-08-10 09:58:47
news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

நாடளவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை...

2026-08-10 10:46:29
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04