பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.