இன, மத­வாத செயற்­பா­டு­க­ளுக்கு மக்கள் துணை­போகக் கூடாது

Published By: Vishnu

27 Aug, 2023 | 04:55 PM
image

நாட்டில் மக்கள் மத்­தியில் இன, மத­வா­தத்தை தூண்டி அர­சியல் குளிர்­காயும் நட­வ­டிக்கை தற்­போது தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றது. இவ்­வாறு இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் கிளப்பி அர­சியல் செய்யும் தெற்கிலுள்ள சிங்­கள இன­வாத சக்­தி­யினரின் செயற்­பா­டா­னது மீண்டும் அரங்­கே­றி­ வ­ரு­கின்­றது.  

வடக்கு, கிழக்கில் சிங்­கள பெளத்த தேசி­ய­வா­தத்தை பரப்பும் வகையில் தமிழ் மக்­களின்  காணி­களை சுவீ­க­ரிக்கும் செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. தொல்­பொருள் முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த இடங்கள்  என்ற பேரில் இத்­த­கைய  செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றன. முல்­லைத்­தீவு குருந்­தூர்­மலை விவ­கா­ரத்தை வைத்து  அர­சியல் செய்­வ­தற்கு  தெற்கின் இன­வாத சக்­தி­யினர்  முயன்று வரு­கின்­றனர்.  குருந்­தூர்­ம­லையில்  கடந்த மாதம் இடம்­பெற்ற பொங்கல்  நிகழ்­வுக்கு  எதி­ராக   பெளத்த சிங்­கள  பேரி­ன­வாத சக்­தி­யினர் பெரும் பிர­சா­ரத்தை   மேற்­கொண்­டி­ருந்­தனர். ஆனால்  அத­னையும் மீறி  நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய அங்கு  பொங்கல் நிகழ்வு  இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்தப் பொங்கல் நிகழ்­வினைத் தடுப்­ப­தற்கு  பிவி­துரு ஹெல­உ­று­ம­யவின் தலைவர் உதய கம்மன்­பில  ,பொது­ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அட்­மிரல் சரத்­வீ­ர­சே­கர உட்­பட்டோர்  பெரும்  முனைப்பு காட்­டி­யி­ருந்­தனர்.  சிங்­கள பெளத்த மக்­களை   தூண்­டி­விடும் வகையில் இவர்­க­ளது  செயற்­பா­டுகள்  இடம்­பெற்­றி­ருந்­தன.

 பெளத்த தேரர்­களைக் கொண்ட அமைப்­புக்­களும் இந்த  குருந்­தூர்­மலை விவ­கா­ரத்தில்  தலை­யீ­டு­களை மேற்­கொண்டு   முரண்­பா­டு­களை தோற்­று­விக்க  முயன்­றி­ருந்­தன. இவ்­வாறு வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில்  பெளத்த சிங்­கள  பேரி­ன­வாத  ஆக்­கி­ர­மிப்பை  மேற்­கொள்ளும் வகை­யி­லான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.  இத்­த­கைய  செயற்­பா­டு­க­ளுக்கு தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள், சிவில்  அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள்   கடும் எதிர்ப்­புக்­களை   தெரி­வித்து  வரு­கின்­ற­மை­யா­னது  தெற்கின் சிங்­கள  இன­வாத  செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு   பெரும் விச­னத்தை ஏற்­ப­டுத்தும் விட­ய­மாக  மாறி­யி­ருக்­கின்­றது.

இதன் ஒரு கட்­ட­மாக  கொழும்­பி­லுள்ள வடக்கு, கிழக்கை  சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் இல்­லங்­களை முற்­று­கை­யிட்டு போராட்டம் நடத்­த­வுள்­ள­தாக  பிவி­துரு ஹெல­உ­று­மய கட்­சியின் தலைவர் உத­ய­கம்­பன்­பில  அறி­வித்­தி­ருக்­கின்றார்.

 இது குறித்து கொழும்பில் நடை­பெற்ற  செய்­தி­யாளர் மாநாட்டில்   கருத்து  தெரி­வித்த உதய கம்மன்­பில,  வடக்கு, கிழக்கு மாகாண   தமிழ் அர­சி­யல்­வா­திகள்   தெற்கில்  சுதந்­தி­ர­மாக   வாழ்­வ­தைப்­போன்று  சிங்­க­ள­வர்கள் வடக்கு, மற்றும் கிழக்கில்  சுதந்­தி­ர­மாக  வாழ­வேண்டும்.  சிங்­க­ள­வர்­களின் உரி­மை­களை  வென்­றெ­டுப்­ப­தற்­காக   கொழும்­பி­லுள்ள  வடக்கு, கிழக்­கு   தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் வீடுகள் முற்­று­கை­யி­டப்­படும்.  இதன் முதற்­கட்­ட­மாக  கொழும்­பி­லுள்ள  பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம்  வீட்டின் முன்­பாக   இவ்­வாரம்   போரட்­டத்தில்   ஈடு­ப­டுவோம்.   இந்த போராட்­டத்தில் சிங்­கள  பெளத்­தர்கள் ,இன­வாத கொள்­கை­யற்ற தமி­ழர்­கள் அனை­வரும்    கலந்து கொள்­ள­வேண்டும்   என்று  அழைப்பு விடுத்­துள்ளார்.

இதே­போன்றே குருந்­தூர் ­ம­லை­ வி­வ­கா­ரத்தில் முல்­லை­தீவு நீதி­மன்ற  நீதி­ப­தியின்  செயற்­பா­டு­க­ளுக்கு  எதிர்ப்பு தெரி­வித்து  நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­விடம் விமல் வீர­வன்­ச ­த­லை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி முறைப்­பாடு  செய்­துள்­ளது.  அந்த முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயந்த சம­ர­வீர தலை­மையில்   கடந்த திங்­கட்­கி­ழமை இந்த முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

குருந்­தூர்­மலை விவ­கா­ரத்தில் நீதி­பதி ஒரு­த­லைப்­பட்­ச­மா­கவும் பொறுப்­பற்ற வகை­யிலும்   செயற்­பட்­டுள்­ள­தா­கவும்  இந்த முறைப்­பாட்டில்  குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த வழக்­கி­லி­ருந்து  அவரை நீக்கி   மற்­றொரு  நீதி­பதி முன்­னி­லையில்  விசா­ரணை நடை­பெ­ற­வேண்­டு­மென்றும்   தேசிய சுதந்­திர முன்­னணி நீதிச்­சேவை  ஆணைக்­கு­ழு­விடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றது.

குருந்­தூர்­மலை விவ­கா­ரத்தில்  நீதி­ப­தியின்  செயற்­பாட்டை கண்­டித்து பாரா­ளு­மன்­றத்தில் பொது­ஜன பெர­மு­னவின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  அட்­மிரல் சரத் வீர­சே­கர மூன்று தட­வைகள் உரை­யாற்­றி­யி­ருந்தார்.  குருந்­தூர்­ம­லையில்  நீதி­மன்ற உத்­த­ரவை மீறி பெளத்த விகாரை  கட்­டப்­படும் விடயம் தொடர்பில் நேர­டி­யாக   சென்று  நீதி­பதி விசா­ரணை  நடத்­தி­யி­ருந்தார். இதன்­போது  அங்கு  சென்­றி­ருந்த  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர  கருத்­துக்­கூற  முற்­பட்­ட­போது அதற்கு நீதி­பதி அனு­ம­திக்­க­வில்லை.

அத்­துடன் அங்கு வழி­பா­டு­களில் ஈடு­பட்­ட­பெ­ளத்த பிக்­கு­க­ளையும் வெளி­யேற்­று­மாறு  நீதி­பதி உத்­த­ர­விட்­டி­ருந்தார். இதற்கு எதி­ராக  பாரா­ளு­மன்­றத்தில் கடும் விமர்­ச­னங்­களை  சரத் வீர­சே­கர  செய்­தி­ருந்தார்.  இத­னை­விட  கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி   குருந்­தூர்­ம­லையில் ஆதி­சிவன் ஐயனார் ஆலயம் இருந்த இடத்தில் பொங்கல் பொங்­கு­வ­தற்கு  அப்­ப­குதி மக்கள் நட­வ­டிக்கை  எடுத்­தி­ருந்­தனர். இதற்கு  தடை விதிக்­கு­மாறு  பொலிஸார் நீதி­மன்­றத்தில்  மனுத்­தாக்கல் செய்­தி­ருந்த போதிலும் அதற்கு தடை விதிக்க நீதி­பதி   மறுப்பு தெரி­வித்­தி­ருந்தார்.  இந்த செயற்­பாட்­டுக்கு எதி­ராக இரண்­டா­வது தட­வை­யாக பாரா­ளு­மன்­றத்தில் சரத் வீர­சே­கர  கருத்து கூறி­யி­ருந்தார்.  நீதி­ப­தியின் செயற்­பா­டு­களை விமர்­சிக்கும் வகையில் அவ­ரது உரை  அமைந்­தி­ருந்­தது.

இதேபோன்றே கடந்த செவ்வாய்க் கிழமையும் சரத் வீரசேகர  முல்லைத்தீவு நீதிபதியை ஒரு மனநோயாளி என்று விமர்சித்ததுடன் இவ்வாறானவரால் எவ்வாறு  சரியான முறையில் செயற்பட முடியும்  என்று கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன்  முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு பிறிதொரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும்  பாராளுமன்றத்தில் கோரியிருந்தார்.

இவ்­வாறு குருந்தூர் மலை  விவ­கா­ரத்தை வைத்து  அர­சியல் குளிர்­கா­யும் ­ந­ட­வ­டிக்­கையில்  சரத் வீர­சே­கர மற்றும் உதய கம்­மன்­பில   போன்­ற­வர்கள் ஈடு­பட்டு வரு­கின்­றனர். தெற்கில் சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் பரப்பி வரு­கின்­றனர்.  குருந்­தூர்­மலை விவ­கா­ரத்தில்   இத்­த­கைய  இன, மத­வாத செயற்­பா­டுகள் தூண்­டி­வி­டப்­ப­டு­கின்­ற­மை­யா­னது இரு சமூ­கங்­க­ளுக்கு மத்­தி­யிலும்   முரண்­பா­டு­களை தோற்­று­விக்க செய்­வ­தா­கவே அமை­கின்­றது.

தெற்­கி­லி­ருந்து சிங்­கள மக்­களை பஸ்­களில்  ஏற்­றிச்­சென்று   அவர்­களை  குருந்­தூர்­ம­லையில்  இறக்­கி­விட்டு  முரண்­பா­டு­களை தோற்­று­விப்­ப­தற்கு இத்­த­கைய  சிங்­கள இன­வாத செயற்­பாட்­டா­ளர்கள்  முனைந்து வரு­கின்­றனர். அர­சியல் சுய­ந­லன்­க­ளுக்­காக   இத்­த­கைய  இன, மத­வாத செயற்­பா­டு­களை தூண்­டி­வி­டு­வ­தா­னது பெரும்   இனக்­க­ல­வ­ரங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு   சாத­க­மான சூழலை  ஏற்­ப­டுத்­தி­விடும்.

குருந்தூர்மலை  விவகாரம் தொடர்பில்  வடக்கு, கிழக்கு மாகாண பிரதம  சங்க நாயக்கர் சியாம்பலா கஸ்வெவ  விமலசார நாயக்க தேரர் தெரிவித்த கருத்தானது  உண்மை நிலையை  பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றது.  குருந்தூர்மலை  விவகாரமானது தொல்பொருள் திணைக்களத்துக்கு உரியது. இதனை  தனியொரு மதம் தனக்கானது என உரிமை கொண்டாடக் கூடாது. சிங்கள பெளத்தர்கள்  இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது. தமிழ் பெளத்தர்கள்  இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர்  என்பது உண்மையாகும் என்று அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்காக பிதற்றிக்கொண்டிருப்பவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.  நிலைமை  இவ்வாறிருந்தபோதிலும் தெற்கில்    இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளே  தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

நமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில்  இன­வா­தத்தை  தூண்டி தமது அர­சியல் நலன்­களை  மேம்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காகவே  அன்­று­தொட்டு இன்­று­வரை   அர­சியல் தரப்­பினர்  செயற்­பட்டு வரு­கின்­றனர். இத்­த­கைய இன, மத­வாத செயற்­பா­டுகள்  தவிர்க்­கப்­பட வேண்­டு­மென்று  கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் சுய­நல அர­சியல் நலன்­க­ருதி  இத்தகைய இனவாத சக்தியினர் செயற்படுவது  நாட்டுக்கு பாதகத்தையே ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த வருடம்  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய   ராஜபக் ஷ  தலைமையிலான அரசாங்கத்துக்கு  எதிராக அரகலய போராட்டம்  இடம்பெற்றிருந்தது.

இதன்போது  சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பெரும்  போராட்டத்தை நடத்தியிருந்தனர். இத்தகைய  போராட்டத்தில் சகல இன மக்களும்  பங்கேற்று இன,மதவாதத்துக்கு எதிராகவும்  செயற்பட்டிருந்தனர்.  அரகலய போராட்டத்தை அடுத்து நாட்டில்  இன, மதவாத செயற்பாடுகள்   கட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.

ஆனாலும்  அந்த போராட்டம்  முடிவுக்கு வந்ததையடுத்து மீண்டும் இன, மதவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர்காயும்  செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

 இத்தகைய  இனவாத தரப்பினரின்  பிரசாரங்களுக்கோ அல்லது தூண்டுதல்களுக்கோ சிங்கள மக்கள்  எடுபடக்கூடாது. இவர்களின் சுயநல அரசியல் நோக்கங்களை மக்கள்   புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நினைவேந்தல்  நிகழ்வுகளுக்கு; பொதுக்கட்டமைப்பு அவசியம்

2023-09-24 15:36:06
news-image

சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான கோரிக்கை துரோ­கத்­த­ன­மான செயற்­பா­டல்ல

2023-09-17 20:50:18
news-image

இன, மத­வாத செயற்­பா­டு­க­ளுக்கு மக்கள் துணை­போகக்...

2023-08-27 16:55:29
news-image

13 குறித்த சஜித்தின் சரியான நிலைப்பாடு

2023-08-20 20:26:07
news-image

13 ஆவது திருத்தச் சட்டம் குறித்த...

2023-07-30 19:07:21
news-image

யதார்த்தத்தை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டிய...

2023-07-24 16:07:45
news-image

வாழைப்பழத்திற்கே இந்த விலையென்றால் ! மக்கள்...

2023-03-10 10:48:55
news-image

அவதானம் ! அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்...

2022-10-07 12:26:10
news-image

சிறுவர்களுக்கு வடக்கில் ஏன் இந்த அவலம்...

2022-09-30 14:49:03
news-image

மக்களின் உயிர்களுடன் விளையாட்டு !!!

2022-10-07 13:56:09
news-image

உலகிற்கு முன்னெச்சரிக்கையாகும் இலங்கை சிறுவர்களின் நிலை

2022-08-27 21:39:00
news-image

இளமையிலேயே கருகும் மொட்டுக்கள் ! யார்...

2022-08-25 13:42:28