பிரமிட் மோசடி திட்டத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு சீனப் பிரஜைகள் உட்பட நால்வர் கைது

27 Aug, 2023 | 03:05 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

சர்வதேச மட்டத்தில் பிரமிட் மோசடித் திட்டத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு சீன பிரஜைகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சீனப் பிரஜைகள் இருவரும் பிரமிட் மோசடி திட்டத்தின் மூலம் சுமார் 4 கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி கொழும்பு, பொரளை பகுதியிலுள்ள வீடொன்றில் 7 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் பெற்று வசித்து வந்த சீன பிரஜை ஒருவர் தனது 7 மடிக்கணினிகள், 17 மில்லியன் ரூபா பணம் மற்றும் வேன் ஒன்றும்  சிலரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 

அதன்படி கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் பொலிஸார் தொலைபேசி தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து  விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது அவர்களில் சீன பிரஜையின் சாரதியும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. முறைப்பாடு செய்த சீனப் பிரஜை சந்தேக நபர்களுக்கு 15 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொடுத்து தனது சொத்துக்களை கொள்ளையடித்து செல்வதைப் போன்று திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதற்கமைவாக குறித்த சீனப் பிரஜை மற்றும் அவரது மற்றொரு சீன நண்பரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கொழும்பு துறைமுக நகரத்தில் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதாக இருவரும் நாட்டில் பாரியளவில் பிரமிட் மோசடி திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இதன்போது 4 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபரான சீனப் பிரஜை பிரமிட் மோசடி திட்டத்தின் மூலம் பெற்ற பணத்தை கெசினோ சூதாட்டத்துக்கு பயன்படுத்தி இழந்தமையால்  அதனை மறைப்பதற்காகவே இவ்வாறான போலியான திட்டத்தை அரங்கேற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பிரமிட் திட்டத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சீன பிரஜை கொழும்பு, குருந்துவத்தையில் உள்ள வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர். ஏற்கனவே அங்கிருந்து 15 சீனப் பிரஜைகள் மடிக்கணினிகளுடன் தப்பிச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் சர்வதேச அளவிலான பிரமிட் மோசடி திட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மூலம் கொள்ளையடித்ததாக கூறப்பட்ட வேன், சட்ட விரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 30 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், மடிக்கணனிகள் மற்றும் கெப் வண்டி ஒன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு...

2026-02-17 17:04:38
news-image

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையும் பதவி நீக்கம்...

2026-02-17 19:55:24
news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02