(இராஜதுரை ஹஷான்)
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும். 40 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கினால் பெரும்போக விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபடமாட்டார்கள் என மகாவலி விவசாய வலயத்தின் பொதுச்செயலாளர் புஞ்சிரால ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலையால் 54,753 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சு குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.குறைந்தபட்சம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய பயிர்செய்கைகள் பாதிக்கப்பட்டிருக்கும்.
அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் உடவளவ வலய விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். சேதன பசளை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை முழுமையான நட்டஈடு கிடைக்கவில்லை.
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஒரு ஏக்கர் விவசாய நிலத்துக்கு 40 ஆயிரம் ரூபா ஒரு ஹெக்டயர் விவசாய நிலத்துக்கு 1 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிடுகிறது.
2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய இவ்வாறு நட்டஈடு தொகை தீர்மானிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு மூட்டை உரத்தின் விலை 3,000 ரூபாவாக காணப்பட்டது.
ஆனால், தற்போது உர மூட்டையின் விலை 10 ஆயிரம் ரூபாவில் இருந்து ஆரம்பமாகிறது.ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயி ஒருவர் குறைந்தப்பட்சம் ஒன்றரை இலட்சம் ரூபாவையேனும் செலவழிக்க வேண்டும்.
2017 ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு அமைய 40 ஆயிரம் ரூபா நட்டஈட்டை எவரும் ஏற்க போவதில்லை. குறைந்தளவிலான நட்டஈட்டை வழங்கினால் விவசாயிகள் எவரும் எதிர் வரும் பெரும்போக விவசாயத்தில் ஈடுபடமாட்டார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்ள முடியும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM