யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை கைது செய்த கடற்படையினர் அவர்கள் பயணித்த படகையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, இவ்வாறு கைது செய்த மீனவர்களை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவிப்பணிப்பாளரிடம் கையளிக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.