மார்பகத்தை அகற்றாமல் மார்பக புற்றுநோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

25 Aug, 2023 | 05:34 PM
image

இன்றைய காலகட்டத்தில் பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் முதன்மையானது மார்பக புற்றுநோய். மேலத்தேய நாட்டு பெண்களை விட சதவீத அளவில் தெற்காசிய பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அண்மைய ஆய்வின்படி, தெற்காசிய பெண்களும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் சத்திர சிகிச்சை மூலம் மார்பகத்தை அகற்றுவதுதான் முதன்மையான நிவாரண சிகிச்சையாக அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு பெண்கள் இந்த சமூகத்தில் இயல்பு வாழ்க்கை வாழ்வதில் ஆயிரம் போராட்டங்களையும் பிறருடன் பழகுவதில் பாரிய தயக்கத்தையும் பின்னடைவையும் அடைவதாக கண்டறிந்திருக்கிறார்கள். 

இதன் காரணமாக தற்போது மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டால் மார்பகத்தை அகற்றாமல் பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கும் முறை கண்டறியப்பட்டிருக்கிறது என இத்துறை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அதற்குரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, புற்றுநோய் கட்டிகளை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுகிறார்கள். இதன்போது அக்குள் பகுதியில் இருக்கும் நிணநீர் முடிச்சுகளையும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவார்கள். 

மேலும், பெரும்பாலான பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு மேலும் பரவாதிருக்க எந்த பகுதி மார்பகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தப் பகுதி மார்பகத்தை அகற்றிவிடுவார்கள். ஆனால், தற்போது எந்த மார்பகத்தில் புற்றுநோய் கட்டி ஏற்பட்டிருக்கிறது என்பதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால், ப்ரஸ்ட் கன்சர்வேஷன் சர்ஜரி அல்லது ப்ரஸ்ட் அங்கோபிளாஸ்டிக் சர்ஜரி என்ற சத்திர சிகிச்சை மூலம் மார்பகத்தை அகற்றாமல், மார்பகத்தில் உள்ள புற்றுநோய் கட்டிகளை மட்டும் துல்லியமாக சத்திர சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை மூலம் அகற்றி நிவாரணம் அளிக்கிறார்கள். 

இதனால் இத்தகைய நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்ட பிறகு, பெண்கள் மனதளவில் தங்களுடைய மார்பகத்தை பற்றிய தயக்கம் எதுவுமின்றி சமூகத்தினருடன் இயல்பாக உறவாடத் தொடங்குகிறார்கள். 

அதே தருணத்தில் இத்தகைய நவீன சத்திர சிகிச்சை யாருக்கு மேற்கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்பது மருத்துவர்களின் அவதானிப்பாக இருக்கிறது என்பதும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

- டொக்டர் அனீஸ்

தொகுப்பு : அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்மறை எண்ணங்களை அகற்ற உதவும் நரம்பியல்...

2024-07-22 17:19:21
news-image

பால், பால்மா, பாற்பொருட்களால் ஏற்படும் லாக்டோஸ்...

2024-07-20 18:21:12
news-image

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுவது...

2024-07-19 17:33:29
news-image

கல்லீரல் சுருக்க பாதிப்பால் உண்டாகும் ரத்த...

2024-07-19 17:27:13
news-image

ஃபிஸர் எனும் ஆசன வாய் வெடிப்பு...

2024-07-17 17:23:03
news-image

கெலாய்டு வடு பாதிப்பை அகற்றும் நவீன...

2024-07-16 14:41:29
news-image

முடி அகற்றுவதற்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2024-07-15 17:07:51
news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12