மன்னார், சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் உரிய உரிமப் பத்திரமில்லாது மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற காரணங்களாலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 7 டிங்கி படகுகள், 7 சட்டவிரோத மீன்பிடி வலைகள் (சுருக்கு வலை ), 3 சோடி துடுப்பு மட்டைகள் மற்றும் 12  கடல் பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யத மீனவர்களை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.