பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு இடையிலான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இன்று மாலை 4 மணி தொடக்கம் 6 மணிவரையிலான 2 மணித்தியாலங்கள் குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.