சரத்குமார் - கௌதம் கார்த்திக் இணைந்து மிரட்டியிருக்கும் 'கிரிமினல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

25 Aug, 2023 | 05:26 PM
image

நடிகர் நடிகர்கள் சரத்குமார் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் கதையின் நாயகர்களாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கிரிமினல்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் தக்ஷிணாமூர்த்தி ராமர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கிரிமினல்'. இதில் சரத்குமார், கௌதம் கார்த்திக், ஜனனி, பி. எல். தேனப்பன், ரவீனா தாஹா, கருணாகரன், அஞ்சலி சுனில் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெம்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்ஸா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிக் பிரண்ட் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. ஆர். மீனாட்சி சுந்தரம் மற்றும் ஐபி கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சரத்குமார் மற்றும் கௌதம் கார்த்திக் தோன்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமாரின் தோற்றமும், அவர்களின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியில் வேறு மாதிரியான தோற்றமும் இருப்பது  ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் மற்றும் வெளியீட்டு திகதி ஆகியவை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரான்சில் எதிர்வரும் 26ஆம் திகதி 'பறவாதி'...

2025-01-18 00:54:36
news-image

நடிகர் அப்புகுட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்'...

2025-01-17 15:33:58
news-image

பவன் கல்யாண் நடிக்கும் 'ஹர ஹர...

2025-01-17 15:32:15
news-image

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸஸ் &...

2025-01-17 15:31:55
news-image

சாதனை படைக்கும் அஜித் குமாரின் 'விடாமுயற்சி'...

2025-01-17 17:19:13
news-image

நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்'...

2025-01-16 17:05:13
news-image

பார்த்திபன் வெளியிட்ட ' புரவியாட்டம் '...

2025-01-16 17:04:38
news-image

நடிகர் மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின்...

2025-01-16 17:03:46
news-image

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த விஜய் சேதுபதி...

2025-01-16 16:49:05
news-image

நடிகர் 'கெத்து' தினேஷ் நடிக்கும் 'கருப்பு...

2025-01-16 17:41:35
news-image

காதலர் தினத்தன்று வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின்...

2025-01-16 16:45:44
news-image

கத்திக்குத்து தாக்குதல் ; நடிகர் சயிப்...

2025-01-16 16:49:31