குழந்தைகளை வீட்டில் வைத்து வீழ்வது மற்றும் தீக்காயமடைவதில் இருந்து காப்பாற்றுவது பெற்றோரின் கடமையாகும்.வீட்டில் குழந்தைகள் விழுவது சாதாரண விடயமாகும். ஆயினும் பொறுப்புடன் சரியான முதலுதவியை வழங்குவதன் மூலம், விபத்துகளையும் அவற்றினால் ஏற்படும் விளைவுகளையும் குறைக்கலாம்.
குழந்தை ஒன்று வீழ்ந்தவுடன், பெற்றோர்கள் அதைக் கண்டு பதற்றமடையாமல், அழுது கதறும் குழந்தையைப் பாதுகாப்பாகத் தங்கள் கைகளால் அணைத்து ஆறுதல்படுத்த வேண்டும். குழந்தை பேசும் வயதை அடைந்துவிட்டால், வீழ்ந்ததால் அடிபட்ட இடங்கள் தொடர்பில் கேட்டறிவதோடு, அது சிறு குழந்தையாக இருந்தால், குழந்தையை உன்னிப்பாக கவனித்து என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும்.
தலையில் அடிபட்டிருந்தால் அல்லது சில இடங்கள் வீங்கியிருந்தால், சூடான பொருட்களை அதன் மீது வைக்க வேண்டாம். அதன் வலியை போக்க, சுத்தமான துணியில் ஐஸ் கட்டியை வைத்து, காயப்பட்ட இடத்தில் மெதுவாக வைக்க வேண்டும். இதன் போது, இரத்தம் தென்படும் பகுதிகள் இருந்தால், அவை மீது மெல்லிய துணியையே வைக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை நேரடியாக தோல் மீது வைக்கக்கூடாது.
ஒரு குழந்தையின் தலையில் அடிபட்ட உடனேயே வாந்தி எடுப்பது அந்த அடியின் விளைவு அல்ல. குழந்தை அமைதியாக இருந்து ஒரு மணி நேரத்திற்குள் வாந்தி எடுத்தால், அது தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக இருக்கலாம். ஒரு மணி நேரத்திற்குப் பின் குழந்தை வாந்தி எடுத்தால், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
மேலும், குழந்தை 1 - 1 1/2 மணி நேரத்திற்குள் தளர்வாக, தூக்கமான தன்மையாக, விளையாடுவதில் குறைவு, பால் குடிக்காமல் இருத்தல் போன்ற அறிகுறிகளைக் காட்டினால், குழந்தையை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தை விழுந்து வாரக்கணக்கில் குளிக்காமல் விட்டுவிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
தலையில் காயம் ஏற்பட்ட பின்னர் குளிப்பது ஒரு பிரச்சனையல்ல, ஏனென்றால் குழந்தையை கிருமிகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்.தீக்காயங்களும் வீட்டில் ஏற்படும் ஒரு பொதுவான ஆபத்தாகும். பாதுகாப்பற்ற சுவிட்ச்கள், மின்சாதனப் பொருட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்திகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைப்பதன் மூலம் தீக்காயங்களைத் தடுக்கலாம்.
தீக்காயம் ஏற்பட்டால், பெற்றோர்கள் அமைதியாக செயற்பட்டு, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன், எரிந்த இடத்தை குளிர்ந்த ஓடும் நீரின் கீழ் சுமார் 20 நிமிடங்கள் வரை பிடிக்கலாம். கடுமையாக எரிந்திருந்தால் அல்லது ஆடை உடலில் ஒட்டிக்கொண்டால், ஆடைகளை அகற்றுதல், ஆடைகளை அணிவித்தல் போன்றவற்றை தவிர்க்கவும்.
எந்தவொன்றையும் அதன் மீது பூசக் கூடாது. தோலின் மேற்பரப்பில் எதையும் பூசாமல், மிகவும் மிருதுவாக வைத்திருப்பதன் மூலம், அதன் வெப்பம் வெளியேறி உட்பகுதிகளை அது சேதப்படுத்துவதை குறைக்கும். கவனக்குறைவு மற்றும் அறியாமையால் ஏற்படும் விபத்துகளைத் தடுத்தல் மற்றும் குறைப்பதன் மூலம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்க வேண்டும்.
Ms. Nilukshi Thilakasiri
குடும்ப சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்
மனநல ஆலோசகர், மனநல மருத்துவர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM