நாட்டின் காப்புறுதித் தொழில்துறையின் பிரதிநிதித்துவ அமைப்பான இலங்கை காப்புறுதியாளர்கள் சங்கம் (Insurance Association of Sri Lanka - IASL) தனது இரத்த தான முன்னெடுப்பு 2023 ஐ ஆகஸ்ட் 24 அன்று வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இரத்த தான முன்னெடுப்பு 2023 ஆனது IASL உறுப்பு நிறுவனங்கள், காப்புறுதித் துறையின் ஆளணியினர் மற்றும் தொடர்புபட்ட ஏனைய தரப்பினரிடமிருந்து பெரும் எண்ணிக்கையானவர்களை பங்கேற்கச் செய்துள்ளதுடன், அவர்கள் மதிப்புமிக்க உயிர்களைக் காப்பாற்ற சமூகத்தின் வலிமையைக் காண்பிக்க இரத்த தானம் செய்துள்ளனர்.
சமூகம் மற்றும் தேசத்தைப் பாதிக்கும் பல்வேறு நெருக்கடிகளின் மூலம் காப்புறுதித் துறை அதன் ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் ஆதரவாக திகழ்ந்து வருவதுடன், கடினமான காலங்களில் ஒப்பந்ததாரர்களுக்கு உதவ காப்புறுதி மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
இரத்த தான முன்னெடுப்பு 2023 என்பது IASL இன் மற்றொரு முயற்சியாகும், இது காப்புறுதித் துறை, தொடர்புபட்ட தரப்பினர் மற்றும் பொது மக்களை தன்னலமற்றவர்களாக இருக்கவும், இரத்த தானம் செய்வதன் மூலமாகவும், மிகவும் தேவையான நேரங்களில் மக்களின் உயிர்களைக் காக்கவும் ஊக்குவிக்கிறது.
IASL தொடர்பான விபரங்கள்
இலங்கை காப்புறுதியாளர்கள் சங்கம் (IASL) நாட்டின் காப்புறுதித் துறையின் பிரதிநிதி அமைப்பாகும். இது 1989 இல் ஸ்தாபிக்கப்பட்டது. காப்புறுதி வணிகத்தை முன்னெடுக்கும் அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் IASL இன் உறுப்பினர்களாக உள்ளன.
தற்போது, பதிவுசெய்யப்பட்ட அனைத்து 27 காப்புறுதி நிறுவனங்களும் IASL இன் உறுப்பினர்களாக உள்ளதுடன், இச்சங்கம் அதன் உறுப்பினர்களின் பொது ஆர்வம் மற்றும் நலனை பாதிக்கும் விடயங்களில் ஒத்துழைப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்க காப்புறுதியாளர்களை ஒன்றிணைக்கும் பொதுவான நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றது.
அத்துடன், இலங்கை பொதுமக்களுக்கு காப்புறுதி மூலம் பாதுகாப்பு வழங்குவதில் இதன் முயற்சிகள் தனித்துவமானவை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM