பேஸ்புக், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் உள்ளடங்கலாக 100 நிறுவனங்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவு திட்டத்திற்கெதிராக வழக்கு தாக்கலொன்றை செய்துள்ளனர். 

சான்பிரான்ஸிகோவிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்  பேஸ்புக், கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனங்கள உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி 100 நிறுவனங்கள், கூட்டாக இணைந்து டிரம்பின் அமெரிக்க பயணத்தடைக்கு எதிராக வழக்கொன்றை தொடுத்துள்ளனர். 

குறித்த மனுவில் தொழிநுட்பம் மட்டும் ஏனைய வர்த்தக முதலீட்டு நிறுவனங்களும் கையெழுத்திட்டு குறிப்பிட்ட 7 நாட்டவர்கள், அமெரிக்கா வருவதற்கான தடையை நீக்க கோரியே குறித்த வழக்கை தொடுத்துள்ளார்கள்.

மேலும் தற்போது தடையில் உள்ள ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்தும், அமெரிக்காவிற்கு வர விதிக்கப்பட்ட தடைஉத்தரவு ஆணையால் வெளிநாடுகளில் தங்களுடைய சேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைளை விரிவுப்படுத்துவதற்கு, தேவையான திறமைமிகுந்த ஊழியர்களை பெற்று கொள்வதில் மிகுந்த சிரமமப்படுவதாகவும், அதனால் கூடிய விரைவில் தடை உத்தரவை நீக்க வேண்டுமென கோரியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு முன்னணியான 500 நிறுவனங்கள், அமெரிக்காவிற்கு குடியேறிவந்த சந்ததியினராலேயே நிறுவப்பட்டுள்ளதாகவும், எனவே எதிர்கால தொழிநுட்ப, வர்த்தக முன்னேற்றங்கள் குறித்த கவனத்தினை கருத்திற் கொண்டு, குறித்த  தடை உத்தரவு நீக்கப்பட வேண்டுமென குறித்த வழக்கில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.