(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
இலங்கையில் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும் சூழல் காணப்படுவதாக சர்வதேச புலனாய்வு பிரிவினர், நிறுவனங்கள் ஏதும் இதுவரை அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
நாட்டில் பல்வேறு தரப்பினர் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை தேசிய புலனாய்வு பிரிவு கண்காணித்துள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. வங்குரோத்து நிலைக்கு மத்தியில் இரு தரப்பினரும் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிப்பது கவலைக்குரியது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற கிரிக்கெட் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறவுள்ளதாக குறிப்பிடப்படுவதாகவும் பல்வேறு தரப்பினர் பல மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்கள்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இனவாத முரண்பாடுகள் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவு மற்றும் நிறுவனங்கள் ஏதும் இலங்கைக்கு அறிவிக்கவில்லை.
இதை மிகவும் பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன். அத்துடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக குறிப்பிடப்படும் வதந்திகளுக்கு எந்நேரத்திலும் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது.
நாட்டில் பல்வேறு பகுதியில் பல்வேறு தரப்பினர் அரசியல் நோக்கத்துக்காக இனவாதம் மற்றும் மதவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக எமது புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
குருந்தூர் மலை விவகாரம் குறித்து தற்போது பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.குருந்தூர் புராதன பூமியை கொண்டு பௌத்த மதத்தின் எதிர்காலமும், இந்து மதத்தின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படாது என்பதை அனைவரும் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். 30 வருட கால யுத்தம், உயிர் மற்றும் சொத்து சேதம் ஆகிய தாக்கங்களை தொடர்ந்தும் இன்றும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் இரு தரப்பிலும் உள்ளவர்கள் இனவாத முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிப்பது கவலைக்குரியது.
நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதை உறுதியாக உள்ளோம்.தேசிய பாதுகாப்பை பாதுகாப்பு தரப்பினர் நிச்சயம் உறுதிப்படுத்துவார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM