2011 உலக கிண்ணப் போட்டியில் இலங்கை தோற்கவில்லை : காட்டிக்கொடுக்கப்பட்டது - மஹிந்தானந்த

Published By: Vishnu

24 Aug, 2023 | 08:40 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோற்கவில்லை காட்டிக் கொடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் அப்போதிருந்த தேர்வுக் குழுவின் உயர் அதிகாரியொருவரின் 2013 ஆம் ஆண்டின் சொத்து விபரங்களை ஆராய்ந்தால் அதை  உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்  மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற கிரிக்கெட் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2011 ஆம் ஆண்டு  உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி  தோல்வியடையவில்லை. காட்டிக் கொடுக்கப்பட்டது .என்ற நிலைப்பாட்டிலேயே நான் இப்போதும் இருக்கின்றேன். இதற்கு தேவையான சாட்சிகள் உள்ளன. அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2011 காலப்பகுதியில் தேர்வுக் குழுவில் இருந்த உயர் அதிகாரியின் 2013 சொத்து விபரங்களை ஆராய்ந்தால் அது வெளிப்படும்.

இதேவேளை போட்டி காட்டிக்கொடுப்புகள் இப்போதும் இடம்பெறுகின்றன. கடந்த காலங்களில் காலியில் நடந்த சம்பவங்கள் அதை எடுத்துக்காட்டுகின்றன. இதன்படி விளையாட்டுத்துறையில் பெரும் ஊழல் மோசடிகள் உள்ளன. அது தற்போதைய எல்.பி.எல் வரையில் வந்துள்ளன.

எமது ஆட்சியில் கிரிக்கெட் சுயாதீனமாக செயற்பட்டது.கிரிக்கெட் விளையாட்டை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கொண்டு சென்றோம்.கிரிக்கெட் விளையாட்டில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளுக்கு தீர்வு காண அரசியல் கொள்கை அடிப்படையில் தீர்வு காண முயற்சித்தாலும்,ஒருசிலர் அதற்கு தடையாக செயற்படுகிறார்கள்.ஆகவே கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய நிலை குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்தி கொள்கை ரீதியில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற...

2025-04-18 01:22:12
news-image

18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-18 01:18:14
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தனது சொந்த மண்ணில்...

2025-04-18 01:14:18
news-image

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

2025-04-17 03:42:47
news-image

இலங்கைக்கு இரண்டாவது வெள்ளிப் பதக்கம்: பெண்களுக்கான...

2025-04-17 03:40:20
news-image

சுப்பர் ஓவரில் ராஜஸ்தான் றோயல்ஸை டெல்ஹி...

2025-04-17 03:38:02
news-image

பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தில் சர்ச்சை;...

2025-04-16 23:21:01
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-04-16 17:15:53
news-image

ஆசிய ஹொக்கி சம்மேளனக் கிண்ணம் 2025;...

2025-04-16 16:06:32
news-image

 யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க ...

2025-04-16 02:15:30
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் குறைந்த எண்ணிக்கைகள்...

2025-04-16 01:47:52
news-image

18இன் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-16 01:45:17