பாராளுமன்ற பணியாளர்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் : சபையின் கௌரவத்துக்குப் பொருத்தமற்றவை - பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு

Published By: Vishnu

24 Aug, 2023 | 09:17 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

சபாமண்டபத்தில் சபையின் அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும்போதும், சிலசந்தர்ப்பங்களில் சபா மண்டபத்துக்கு வெளியேயும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாராளுமன்ற பணியாளர்கள், செயலாளர்குழு மற்றும் அதன் பணியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் அதியுயர் சபையின் கௌரவத்துக்குப் பொருத்தமற்றவை என சபையின் கவனத்துக்குக் கொண்டு வருவதாக சபாநாயகரின் அறிவிப்பை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் வியாழக்கிழமை (24) சபைக்கு அறிவித்தார்.

குறிப்பாக சபை அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும்போது பாராளுமன்ற பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய இந்தப் பணிகளை சுயாதீனமாக மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் நிறைவேற்றுவதற்கு  சபாநாயகர், சபைக்குத் தலைமைதாங்கும் உறுப்பினருக்கு ஆலோசனை வழங்கும் அல்லது உதவும் அதிகாரிகள் என்ற ரீதியில் அரசியலமைப்புக்கு அமைய அரசியலமைப்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற செயலாளர் குழுவுக்கு, சுயாதீனமாக அல்லது பக்கச்சார்பற்ற முறையில் செயற்படுவதைத் தடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் அமையலாம். 

அதனால்  இதுபோன்று பாராளுமன்ற செயலாளர் குழுவில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதனுடன் இணைந்த பணியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், அடிப்படை அற்ற குற்றச்சாட்டுக்களை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துக்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக சபாநாயகரின் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்  பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00