(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள்ள எத்தனை கிரிக்கெட் கிளப் தேசிய மட்டத்திலான கிரிக்கெட் போட்டிகளில் பங்குப்பற்றுகின்றன.
வியாஸ்காந்த தேசிய மட்டத்திலான கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கிரிக்கெட் உட்பட விளையாட்டுத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் குறிப்பிடும் விடயங்களுக்கும்,ஜனாதிபதி முறைமைக்கும் இடையில் ஒருமித்த தன்மை காணப்படுகிறது. தேர்தல் காலத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக குறிப்பிடுவார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதை மறந்து விடுவார்கள். அதே போல் தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு மற்றும் கிரிக்கெட் நிர்வாக சபையின் நிலைவரம் காணப்படுகிறது.
கிரிக்கெட் நிர்வாகத்தில் இடம்பெறும் வாக்குமுறை குறித்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.வாக்களிப்பில் கலந்துக் கொள்பவர்களில் எத்தனை பேர் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பது கேள்விக்கிடமாகவுள்ளது.கிரிக்கெட் விளையாட்டுடன் எவ்வித தொடர்புமில்லாதவர்கள் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் தீர்வு தீர்மானங்கள் எடுக்கிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள்ள எத்தனை கிரிக்கெட் கிளப் தேசிய மட்டத்திலான கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபடுகின்றன. முத்தையா முரளிதரனுக்கு பிறகு தமிழர்கள் தேசிய மட்டத்திலான கிரிக்கெட் விளையாட்டில் முன்னிலை வகிக்கவில்லை. வியாஸ்காந்த தேசிய மட்டத்திலான கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கிரிக்கெட் மற்றும் ஏனைய விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி தேசிய மட்டத்திலான போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும்.
கிரிக்கெட் விளையாட்டில் மோசடி இடம்பெறுவது இன்று அல்லது நேற்று இடம் பெற்றதல்ல,பெறுவதுமல்ல, ஆனால் ஒரு தனியார் ஊடகம் தற்போது கிரிக்கெட் மோசடி குறித்து அதிக அக்கறை கொண்டு அதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளமை ஆச்சரியத்துக்குரியது. விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவது முறையற்றது. அவ்வாறான செயற்பாடுகள் விளையாட்டு வீரர்களுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM