மக்கள் வங்கி, சர்வதேச இளைஞர் தினத்தில் YES Investment Plan என்ற முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

Published By: Vishnu

24 Aug, 2023 | 09:20 PM
image

ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச இளைஞர் தினத்தை அனுட்டிக்கும் வகையில்,“Onwards with Green Banking”  (பசுமை வங்கிச்சேவையுடன் முன்னோக்கி) என்ற கருப்பொருளுக்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட YES Digital Green Savings Account என்ற டிஜிட்டல் பசுமை சேமிப்புக் கணக்கின் மூலம் மக்கள் வங்கி பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் விசேட வைபவம் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃ பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோரின் தலைமையில் கொழும்பு 02 இல் அமைந்துள்ள மக்கள் வங்கியின் தலைமையகக் கிளையில் அண்மையில் இடம்பெற்றது.

“YES Executive Premier Plan” என்ற பெயரிலான முதலீட்டுத் திட்டத்தின் அறிமுகமும் நிகழ்வில் இடம்பெற்றதுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் மார்வன் அத்தபத்து மற்றும் தற்போதைய டெஸ்ட் அணியின் துணைத் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோருக்கு முதலீட்டுத் திட்டங்கள் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. இது தவிர, நிலைபேண்தகு செயல்திட்டங்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படும் பசுமை மின்வலு கடன் திட்டமும் (Green Power Loan Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது.

வங்கிச்சேவை மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேற்றியலை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சித்திட்டமானது, பொறுப்பான நிதி நிறுவனமாக வங்கியினால் ஆரம்பிக்கப்பட்டதுடன், மேலும் இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (பரிவர்த்தனை வங்கிச்சேவை மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்) ரொஹான் பத்திரகே, பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) ரேணுகா ஜயசிங்க, நிறுவன மற்றும் நிர்வாக முகாமைத்துவ அணிகளின் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்