கொழும்பு அழகியற் பல்கலைக்கழக மண்டபத்தில் கர்நாடக நாட்டுப்புற கலைஞர்களின் கர்நாடக கலாச்சார கலை நிகழ்வு

Published By: Vishnu

24 Aug, 2023 | 05:28 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள, 30 கர்நாடக நாட்டுப்புற கலைஞர்களின் கர்நாடக கலாச்சார கலை நிகழ்வு வெள்ளிக்கிழமை (25) கொழும்பு அழகியற் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் நாட்டுப்புற நடனம்,  தனி நடனம், ஜோடி நடனம்,  கவிதை அரங்கம், பொம்மலாட்டம், இசைக்கேச்சேரி என இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படவுள்ளன.

இலங்கையில் முதல் தடவையாக நடைபெறவுள்ள இந்நிகழ்வை, இந்திய சர்வதேச கலாச்சார பேரவை, சுவாமி விவேகானந்தா இந்திய கலாச்சார மையம் ஆகியவற்றுடன், ஏசியன் மீடியா அண்ட் கலாச்சார சங்கம் (ASIAN MEDIA & CULTURAL ASSOCIATION), பென் ஸ்ரீலங்கா (PEN SRI LANKA) இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில், இந்திய நாட்டுப்புற நடனத்தை திருமதி மாதுரி போண்ட்ரே மற்றும் குழுவினரும் (Madhuri Bondre & Group),  யக்சாகனா நடன நிகழ்வை ஷ்ரேயாஸ் ரவி ஹேக்தேவும் (Shreyas Ravi Hegde)  அரங்கேற்றவுள்ளனர். 

இந்த  40 ஆவது சர்வதேச கலை விழா கொண்டாட்டத்தில், ஜயஸ்ரீ ரவி ஹேக்தேவுடன் ஸ்ருதி ஆஷிஷ் (Guru Dr. Jayashree Ravi Hegde & Shruthi Ashish) ஜோடி நடனமும்,  பேராசிரியர் பிண்டிகனவேல் பகவான் (Prof. Bindiganavele Bhagavan) மற்றும் கலாநிதி அர்ச்சனா அதானி (Dr.Archana Athani) கவிதை தொகுப்பும், யசோதா ரங்க புத்தாலியின் (Yasodha Ranga Puthali) பொம்மலாட்டமும், ஆரத்தி சுரேஷ் ( Arathi Suresh , அனு ஆனந்த்  (Anu Anand) ஆகியோரின் தனி நடனமும், வெங்கடேஷ் மூர்த்தி ஷிரூர் ,(Venkatesh Moorthi Shiroor) , கோன ஸ்வாமி ( Gona Swamy),  புஷ்பா ஆரத்யா (Pushpa Aradhya), மந்தேஷ் மாமதபுர  (Mathesh Mamadapura)  ஆகியோரின் இசைச் கச்சேரியும் நடைபெறவுள்ளன.

கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க,  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், அழகியற் பல்கலைகழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரோஹன பி.மஹலியானாராச்சி மற்றும் கலாநிதி அமில கங்கானம்கே ஆகியோரும் அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

அன்றைய தினம் மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சியை அனைவரும் இலவசமாக  கண்டுகொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருநீறு பூசும்போது கடைப்பிடிக்க வேண்டியவை!

2023-11-29 12:42:00
news-image

கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமை  

2023-11-22 21:21:02
news-image

அடி பணியும் அதர்மக்காரர்களை மன்னித்து ஆட்கொள்ளும்...

2023-11-18 16:34:58
news-image

"சஷ்டியை நோக்க சரவண பவனார்...!" :...

2023-11-18 13:08:18
news-image

கந்த சஷ்டி வரலாறு....!

2023-11-14 09:25:26
news-image

சகல செளபாக்கியங்களையும் நல்கும் கந்த சஷ்டி...

2023-11-13 17:49:04
news-image

இருளகற்றி ஒளியேற்றும் நன்னாளே தீபத்திருநாள்!

2023-11-08 12:41:53
news-image

கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ வழிகாட்டும்...

2023-11-09 17:17:21
news-image

தருமையாதீனத்தின் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ...

2023-11-05 18:39:09
news-image

'நல்லூரான் கட்டியம்' புகழ் விஸ்வ பிரசன்ன...

2023-11-03 14:07:05
news-image

யானையிடம் ஏன் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்? 

2023-11-02 13:11:36
news-image

இறந்தவர்கள் விண்ணகத்தில் நுழைய வழிகாட்டும் மரித்த...

2023-11-02 12:12:21