(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருமானத்தை ஈட்டிக் கொள்ள இலங்கை சட்டக்கல்லூரி 150 சதவீதம் முதல் 1400 சதவீதத்தில் கட்டணங்களை எதனடிப்படையில் அதிகரித்துள்ளது.
முறையற்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சட்டக்கல்லூரியின் கற்கை கட்டணம் குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிததலாம் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.சடுதியான கட்டண அதிகரிப்பால் பலரது சட்டக் கல்லூரி கனவு நிச்சயமற்றதாகியுள்ளது.
கடந்த காலங்களில் 6000 ரூபாவாக காணப்பட்ட சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சைக் கட்டணம் தற்போது 15000 ரூபாவாகவும்,முதலாம் ஆண்டு மாணவர்களின் கற்கை மற்றும் நூலக செலவுகள் உட்பட ஏனைய செலவுகளுக்காக அறவிடப்பட்ட 18900 ரூபா தற்போது 67500 ரூபாவாகவும், இரண்டாம் மாணவர்களிடமிருந்து அறவிடப்பட்ட 15000 ரூபா தற்போது 40500 ரூபாவாகவும்: இறுதி ஆண்டு மாணவர்களிடமிருந்து அறவிடப்பட்ட 19 ஆயிரம் ரூபா தற்போது 50500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சடுதியாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளின் கனவை நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.இவ்வாறான கட்டண அதிகரிப்பால் திறமையான சட்டத்தரணிகள் தோற்றம் பெறுவதற்கு பாரிய தடை ஏற்பட்டுள்ளது.
சட்டக்கல்லூரி மாணவர்களிடமிருந்து அறவிடும் கட்டணங்களை சடுதியாக அதிகரிக்கும் வகையில் 150 சதவீதத்தில் இருந்து 1400 சதவீதம் வரை அதிகரிக்கும் வகையில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை அநீதியாகும்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு இலங்கை சட்டக்கல்லூரி எந்த அடிப்படையில் இவ்வாறு கட்டணங்களை அதிகரித்துள்ளது என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும் அத்துடன் முறையற்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM