சந்திர மண்டல வாசலை பாரதம் தொடும் போது நாம் தரைக்கு கீழே தொல்பொருளை தேடுகிறோம் - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ

Published By: Digital Desk 3

24 Aug, 2023 | 04:47 PM
image

சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் பாரதம் சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக  இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் “மூன்-ப்ராஜெக்ட்” வேலைத்திட்ட பணிப்பாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞான தொழிட்நுட்ப அணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த சாதனையை எண்ணி, தென்னாசிய நாட்டவராகவும், இந்திய வம்சாவளி தமிழராகவும் பெருமையடைகிறேன். ஆனால், வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலை பாரதம் தொடும் போது, நாம் தரைக்கு கீழே தொல்பொருளை தேடுகிறோம் என்ற உண்மையை உணர்ந்து வருந்துகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

பாரதம் தந்த 13 ஆவது திருத்த மாகாணசபையும் இன்று குருந்தூர் மலையில் ஏறி விழுந்து நிற்கிறது. அது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்று இழுபறி படுகிறது. சரித்திரத்தில் இருந்து பாடம் படிப்பதற்கு பதிலாக,  எல்லா பிரச்சினைகளுக்கும் சரித்திரத்துக்குள் நுழைந்து பதில் தேடும் தோற்றுப்போன நாட்டவராக நாம் இன்று இருக்கிறோம்.  

தொல்பொருள் அகழாய்வு பிரதேசம், மதங்களுக்கும், மத நிகழ்வுகளுக்கும் இடம் தராத பாதுகாக்கபட்ட பிரதேசமாக இருக்க வேண்டும். அது தொடர்பான எல்லா வரலாறு உண்மைகளையும் ஆவணப்படுத்தி ஆர்வலர்களுக்கு எடுத்து கூறும் அரச நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற முற்போக்கான சிந்தனையறிவு எமக்கு இல்லை. ஆகவே, ஒருநாள், மாலைத்தீவும் இப்படி “மூன்-ரொக்கட்” அனுப்பும் வரை நாம் இப்படி தொல்பொருளாராட்சியில் தேடி மோதிக்கொண்டே இருப்போம்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 17:21:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29
news-image

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே...

2025-02-14 16:55:18
news-image

வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை...

2025-02-14 16:53:18
news-image

தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம்...

2025-02-14 16:58:29
news-image

காற்றாலை மின் திட்டம் - அடுத்த...

2025-02-14 16:08:19
news-image

பக்கமுன பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-02-14 16:31:01
news-image

ரின் மீன் இறக்குமதியை தடை செய்வதாக...

2025-02-14 15:53:02
news-image

நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

2025-02-14 15:33:58