நிகழ்காலதொழில் சந்தையில் அதிகளவு தொழில்சார் கேள்விகள் நிலவும் துறைகளில் தொழிற்பயிற்சி பாடநெறிகளை ஆரம்பிக்க பன்னிபிட்டி PACE Institute நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் எழுதிய மாணவர்களை இலக்குவைத்தே இந்தபாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

மிக வெற்றிகரமானதொரு தொழிற்பயிற்சி பயணத்தின் அடிப்படையான இந்தபாடநெறிகள் ஊடாக தகவல் தொழில்நுட்பதுறையில் (IT) அதிக கேள்வி நிலவக்கூடிய பலபாடநெறிகளே இடம்பெறுகின்றன. அவை Certificate in Linux, Certificate in Digital Marketing, IT and Soft Skills Course, MS Office Course, Certified Professional in Web Development (CPWD), Computerized Accounting Courseஆகியனவாகும். 

Certificate in Linux நிகழ்கால உலகில் அதிகமாக பரவிவரும் கணனி செயற்பாட்டுகட்டமைப்பான (Open Source operating system) Linux இன் ஆரம்பபாடநெறியாகும். Linux பாவனை துரிதமாக வளர்ச்சியடைவதுடன் உலகில் முதல்நிலை நிறுவனங்கள் 500 இல் 90 வீதமானவை தமது கணினிக்கட்டமைப்புக்காக Linux ஐ பாவனைசெய்கின்றது.

இத்துறைக்கு உள்ளுர் மற்றும் சர்வதேசரீதியாக அதிக தொழில்வாய்ப்புக்கள் காணப்படுவதுடன் Linux தொழிற்பயிற்சியாளர்களுக்கான கேள்வியும் அதிகம் நிலவுகின்றது. இத்தகைய விசேடதுறைக்குள் பிரவேசிப்பதற்கான பாடநெறியாக ‘Certificate in Linux’ ஐ குறிப்பிடலாம்.

குறைந்தகால கட்டத்திற்குள் துறையில் நிபுணராகமாற இதன் ஊடாக வாய்ப்புகிட்டும். Certificate in Digital Marketing பாடநெறியானது தொழிற் பயணத்தின் சிறந்த ஆரம்பமாகும்.

வாழ்க்கைக்கு தண்ணீர் இன்றியமையாதது போல, டிஜிட்டல் மார்க்கட்டிங் இன்றி எந்தவொரு வியாபாரத்தையும் இன்று கொண்டு செல்லமுடியாது. அந்தளவுக்கு டிஜிட்டல் மார்க்கட்டிங் முக்கியமானதாகிவிட்டது. உலகம் வேகமாக டிஜிட்டல் துறையை நோக்கி பயணிப்பதால், டிஜிட்டல் துறைசார்ந்ததொழில் நிபுணர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அயர்லாந்தின் Institute of Digital Marketing இனால் வழங்கப்படும் Professional Diploma in Digital marketing மற்றும் MSc in Digital Marketing போன்ற தொழிற்பயிற்சிகளுக்கு தகுதிபெற ஆரம்பமாகவும் Certificate in Digital Marketing பாடநெறிஉள்ளது.

IT & Soft Skills Course ஊடாக அனைத்து தொழில்களுக்கும் தேவையானதகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் அறிவை வளர்ப்பதன் ஊடாக ஏனையவர்களைவிட நீங்கள் சிறப்பு தேர்ச்சி பெறலாம். கல்வி தகுதிகளுடன் தொழிற்பயிற்சி மற்றும் சிறந்த வெற்றியாளராவதற்கான மனநிறைவு (qualifications + career competence + Growth mindset) கொண்டநபர் ஒருவருக்குதமதுதொழிலின் உயர்ந்த இடத்தை அடைய இது உதவும்.

நிறுவன உரிமையாளர்கள் எப்போதும் தமது நிறுவனத்தை முன்னேற்றக் கூடியவர்களையே வேலைக்கு அமர்த்த முற்படுவர். எனவே சிறந்ததொழில் வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு It and soft skills பாடநெறி முக்கியமானது.

MS Office Course  படநெறி ஊடாக office package இல் உள்ளMS word, MS Excel மற்றும் MS power point தொடர்பான விரிவான அறிவுவழங்கப்படும். உங்கள் தொழில்துறை எதுவாயினும் அதற்கு தேவையான office package தொடர்பான முழுமையான அறிவை வழங்குவதுடன் பாடநெறியை நிறைவு செய்த பின்னர் ICDL (International Computer Driving License) மற்றும்Cetiport போன்ற சர்வதேச கணினி பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கசந்தர்ப்பம் வழங்கும்.

Certified Professional in Web Development (CPWD) தகவல் தொழில்நுட்பதுறையில் மேலும் விசேடமார்க்கமாககருதமுடியும். இணையத்தள வடிவமைப்பாளர்களுக்கு தொழில்சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றதுடன் இணையத்தள உருவாக்கம் மிகவேகமாக முன்னேறிவரும் துறையாகும். சர்வதேச இணையத்தள உருவாக்குபவர்களால் இந்த பாடநெறி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் வகுப்பறையில் இடம்பெறும் கல்வி நடவடிக்கை மூலம் இணையத்தள உருவாக்கும் தொடர்பான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

Computerized Accounting Course பாடநெறிகணக்கியல் மற்றம் பட்டயக் கணக்காளர்களுக்கும் உயர்தர வணிக பிரிவில் பயின்ற மாணவர்களுக்கும் மிகமுக்கியம். கணக்கியல் மற்றும் பட்டயக் கணக்காளர் துறைகளில் அனைத்து நடவடிக்கைகளும் கணினி மென்பொருள் (Accountant software) ஊடாகதற்போது நடைபெறுகிறது.

இந்தமென்பொருள் தொடர்பாக அறிவின்றி தொழில்துறையில் ஈடுபடமுடியாது. எனவே இந்த மென்பொருள் கணக்கியல் மற்றும் பட்டயக்கணக்காளர் துறைக்கு மிகமுக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.