தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்

Published By: Digital Desk 3

24 Aug, 2023 | 04:40 PM
image

நாட்டில் கடும் வரட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டதின்போதே இது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நீர்வழங்கல், நீர்பாசனம், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகள் இணைந்தே கூட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

பிரதமரின் செயலாளர் தலைமையில் மேற்படி மூன்று அமைச்சுகளின் செயலாளர்களை உள்ளடக்கிய வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், துறைசார் அரச நிறுவனங்களும் இக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் குடிநீரை பெறுவதில் உள்ள சிக்கல்கள், சுகாதாரமான நீரை வழங்குவதில் உள்ள நெருக்கடிகள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பில் கருத்துகளும் பெறப்பட்டன. காத்திரமான சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், ரொஷான் ரணசிங்க, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, சுதர்சன தெனிபிட்டிய, ஜகத் சமரவிக்கிரம மற்றும் பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க உள்ளிட்ட பிரதமர் அலுவலக அதிகாரிகள், நீர்ப்பாசன அமைச்சு, நீர் வழங்கல் அமைச்சு மற்றும் மகாவலி அதிகார சபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06
news-image

மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை...

2026-05-20 14:51:02
news-image

“பாடசாலை அதிபரை மாற்றவேண்டாம்” - யாழ்....

2026-05-20 12:46:00
news-image

புஸ்ஸல்லாவையில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர்...

2026-05-20 12:33:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் வருடாந்த பராமரிப்புச் செலவு...

2026-05-20 11:59:40
news-image

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342...

2026-05-20 11:51:03