யாழ்ப்பாணத்தில் வரட்சியினால் 22ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு - மாவட்ட அரசாங்க அதிபர் சிவபால சுந்தரன்

Published By: Digital Desk 3

24 Aug, 2023 | 04:35 PM
image

அனர்த்த நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.சிவபால சுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின்  வரட்சி நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்ககயில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலைமையின்படி 22 ஆயிரம் குடும்பங்கள் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதில், சுமார் 8,000 குடும்பங்களைசேர்ந்த  மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

குறிப்பாக நெடுந்தீவு ஊர்காவற் துறை சாவகச்சேரி மருதங்கேனி சங்கானை போன்ற பிரதேச செயல பிரிவுகளில் இந்த குடிநீர் பற்றாக்குறை அல்லது மிக வரட்சியான நிலைமை காணப்படுகின்றது.

 இந்த பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையத்தின் ஊடாகஅந்த திணைக்களத்தினுடைய அனுசரணையுடன் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேபோல தொடர்ச்சியாக மாவட்டத்தில் இருக்கக்கூடிய இந்த நிலைமை நீடிக்குமாக இருந்தால் சில வேலைகளில் இன்னும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். 

இதற்கு ஏற்றாற் போல விரைவில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களை அழைத்து ஒரு அனர்த்த முகாமைத்துவை தொடர்பான ஒரு விசேட கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

எனவே, தற்போதுள்ள அனர்த்த நிலைமைகளை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும்.

அதேபோல விவசாயதுறையில் பாதிக்கப்படுவோர் சம்பந்தமாகவும் அதே போல் வறடச்சியின் மூலமாக அன்றாட தொழில் இழந்துள்ளோர் தொடர்பிலும் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு ஏதாவது  நிவாரணம் அரசு நிறுவனங்கள் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக உதவிகளை வழங்குவதற்காக விரைவாக விசேட கூட்டத்தினை கூட்டவுள்ளோம்.

தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலை காரணமாக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் விவசாயிகளிடமிருந்து தனிப்பட்ட ரீதியாக விண்ணப்பங்கள் எதுவும் வரவில்லை. எனினும், விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது கிணற்று நீர் வற்றிக்கொண்டு போகின்றது. எனவே ஒட்டுமொத்தமாக பிரதேச செயலகரீதியாக விவசாயிகளினுடைய பாதிப்பு சம்பந்தமான ஒரு கணக்கெடுப்பினை செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நீர் வழங்கல்...

2026-02-13 09:51:32
news-image

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர்...

2026-02-13 08:55:58
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பிற்காக விசேட...

2026-02-13 09:47:49
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: விசேட மேல்...

2026-02-13 09:29:44
news-image

சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

2026-02-13 09:15:32
news-image

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க...

2026-02-13 09:33:35
news-image

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு :...

2026-02-13 09:06:33
news-image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள்...

2026-02-13 09:05:24
news-image

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க...

2026-02-13 09:25:17
news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59
news-image

விபத்தில் சிக்கி 17 வயது இளைஞன்...

2026-02-13 08:24:52
news-image

கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல...

2026-02-13 06:24:32