நோயின் தாக்கத்தை தாங்க முடியாது தற்கொலை செய்யும் முகமாக நஞ்சருந்திய நபரொருவர் எட்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தாவடி வடக்கு கொக்குவில் மேற்கு பகுதியைச் சோ்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான கணபதி தம்பித்துரை வயது 75 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி  குறித்த நபர் நஞ்சருந்திய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

 குறித்த நபரின் சடலம் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய மரண விசாரணைஅதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்க்கொள்ளப்பட்ட மரண விசாரணையையடுத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.