பௌத்த துறவி போல் வேட­மிட்டு  மது போதையில் தள்­ளா­டி­ய­படி யாசகம்  பெற்று வந்த நப­ரொ­ரு­வரை நாவ­லப்­பிட்­டிய பௌத்த இளைஞர் சங்க உறுப்­பி­னர்கள் பிடித்து  விகா­ரா­தி­ப­தியின் மூலம் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

மேற்­படி சம்­பவம் நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை  நாவ­லப்­பிட்­டி  நகரில் இடம் பெற்­றுள்­ளது. குறித்த நபர் நாவ­லப்­பிட்டி நகரில் மது போதையில் தள்­ளா­டி­ய­படி அட்­சய பாத்­தி­ரத்­துடன்  கடை­களில் யாசகம் பெறு­வ­தனை அவ­தா­னித்த மேற்­கு­றிப்­பிட்ட சங்­கத்­தைச்­சேர்ந்த இளைஞர் குழு­வினர் குறித்த நபரை பிடித்து நகரில் அமைந்­துள்ள பௌத்த ஆல­யத்தின்  விகா­ரா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.  

இத­னை­ய­டுத்து குறித்த விகா­ரா­தி­பதி அந் நபர் அணிந்­தி­ருந்த காவி­யு­டையை களைந்து விட்டு போர்­வை­யொன்றை அணி­யச்­செய்து நாவ­லப்­பிட்­டி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார்.