(நா.தனுஜா)
அண்மைக்காலங்களில் நாட்டின் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவாறு இடம்பெற்றுவரும் சம்பவங்கள் குறித்து மிகுந்த மனவேதனை அடைவதாகத் தெரிவித்துள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய, சமாதானத்துக்கும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கவேண்டாம் என்று நாட்டுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம் உள்ளடங்கலாகக் குறிப்பாக வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை கட்டுமானங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய முறுகல் நிலை என்பன அண்மையகாலங்களில் தீவிரமடைந்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் தமது இயக்கத்தின் சார்பில் கருஜயசூரிய, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் .
அதில் மேலும் கூறியிருப்பதாவது:
அண்மைக்காலங்களில் இலங்கையின் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுவருவது குறித்து நாம் மிகுந்த மனவேதனை அடைகின்றோம்.
அதேவேளை நாட்டின் சமாதானத்துக்கும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கவேண்டாம் என்று நாட்டுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுக்கக்கூடிய செயற்பாடுகளுக்கு வெறுமனே வார்த்தையில்கூட ஒத்துழைப்பு வழங்கவேண்டாமென வலியுறுத்துகின்றோம்.
ஆன்மீக போதனைகளை அடிப்படையாகக்கொண்டிருக்கும் மார்க்கங்கள் மகத்துவமாகக் கருதும் அனைத்து மதச்சின்னங்களும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமான புனிய சொத்துக்களாகும்.
அவை குறித்தவோர் இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ சொந்தமான பௌதிக வளங்கள் அல்ல என்பதை நாமனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
அதுமாத்திரமன்றி தொல்லியன் பெறுமதியுடைய சின்னங்கள், கட்டமைப்புக்களை ஒட்டுமொத்த சமுதாயத்துக்குப் பெருமை சேர்க்கும் உலக மரபுரிமைகளாகக் கருதவேண்டும்.
நாடொன்றின் பெருமை அல்லது மதத்தின் மகத்துவம் என்பன அவற்றின் ஊடாக உலகுக்குக் கிட்டும் நன்மைகள் மற்றும் வழிகாட்டல்கள் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.
ஆனால் அந்த மகத்துவம் அடிப்படைவாத, ஆதிக்க சிந்தனையுடைய செயற்பாடுகளால் இழிவுபடுத்தப்படுகின்றது. எனவே தமது நாடு மற்றும் மதத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டவர்கள் அனைவரும் அடிப்படைவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இலக்காகாமல் செயற்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM