முன்னணி நட்சத்திர நடிகையான ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' MY 3 'எனும் இணைய தொடரின் ஃபாஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
திரைப்பட இயக்குனரான எம் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் இணைய தொடர் 'MY 3'. இதில் ஹன்சிகா மோத்வானி, ஆஷ்னா ஜாவேரி, ஜனனி, சாந்தனு, முகேன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணைய தொடருக்கு கணேசன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜேனரில் ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் இந்த இணைய தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்திற்காக டிரண்ட்லவுட் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் எம். ராஜேஷ் அதன் பிறகு தொடர்ந்து வெற்றி படங்களை வழங்காததால் வாய்ப்புகளை இழந்தார்.
தற்போது இணைய தொடர்களை இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் தயாராகும் முதல் இணைய தொடர் என்பதாலும், அவருக்கு கைவந்த நகைச்சுவை ஜேனரில் இந்த இணைய தொடர் உருவாகி இருப்பதாலும் இதற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM