பாராளுமன்ற செயலாளருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரசன்ன ரணதுங்க

Published By: Vishnu

23 Aug, 2023 | 09:36 PM
image

(எம்.ஆர்.எம். வசீம். இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற செயலாளர் நாயகமோ அல்லது பிரதி செயலாளரோ இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டால் அடுத்து இன்னொரு அரசாங்கம் அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. சமிந்த விஜேசிறி பாராளுமன்ற செயலாளருக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியாக தலையிடுமாறு அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான    பிரசன்ன ரணதுங்க பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ்விடம்  வலியுறுத்தினார்.  

பாராளுமன்றம் புதன்கிழமை (23) பிரதி சபாநாயகர்  அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடியது.இதனையடுத்து இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி  சமிந்த விஜேசிறி  ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தின் போதே அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான    பிரசன்ன ரணதுங்க  இவ்வாறு தலையிட்டு கூறினார்.  

நிதி அமைச்சரிடம், சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதிலளித்த நிலையில் குறுக்கிட்ட சமிந்த விஜேசிறி எம்.பி. மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி இடம்பெற்ற நேரம் குறித்து கேட்பது எப்படி வழக்குக்கு இடையூறாக அமையும் என்று சொல்லுங்கள் எனக்கேட்டார்.

இதற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதிலளிக்கையில்,  இவ்வாறான கேள்விக்கு இதற்கு முன்னரும் பதிலளித்துள்ளோம். 

இது போன்ற தேவையற்ற விஷயங்களுக்கு எனது நேரத்தை ஒதுக்க நான் தயாராக இல்லை. ஆனால் எதைக் கேட்டாலும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் அதையே திருப்பி திருப்பி கேட்டு மற்றவர்கள் முட்டாள்கள் என்று அவர் நினைத்தால் நாங்கள் பதிலளிக்கத்   தயாராக இல்லை என்றார்.

இதன்போது எழுந்த சமிந்த விஜேசிறி எம்.பி., பாராளுமன்ற செயலாளர் நாயகமோ அல்லது பிரதி செயலாளரோ இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டால் அடுத்து இன்னொரு அரசாங்கம் அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான்  மிரட்டல் விடுக்கவில்லை. சட்டப்படி என் வேலையைச் செய்கிறேன். அதே கேள்வியை நான் கேட்கவில்லை. கேட்க வேண்டியது எனது பொறுப்பு. என்னை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

இதன்போதே குறுக்கிட்ட அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, பிரதி சபாநாயகரே, இன்னொரு அரசாங்கம்  வரும்  என பாராளுமன்ற செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிடின் இது ஒரு கேலியாக மாறும். எங்கள் கட்சி உறுப்பினர்களும் அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்றார்.

இதற்கு பிரதி சபாநாயகர் பதிலளிக்கையில், உறுப்பினரே, கண்ணியமான முறையில் செயல்படுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32