பஞ்சாட்சரத்தின் பொருளை அறிந்து உச்சரித்தால் அதிக பலன்...!

23 Aug, 2023 | 04:04 PM
image

எம்மில் பலரும் சிவாலயங்களுக்கு செல்வதுண்டு. அங்கு நடைபெறும் யாகம், வேள்விகளில் பங்குபற்றுவதுண்டு. அங்குள்ள வேதம் படித்த சிவாச்சாரியர்கள் வேத மந்திரத்தை ஓதுவர். அதனுடன் பஞ்சாட்சர மந்திரங்களையும் ஒதுவதுண்டு. இதன் போது எம்மையும் உடன் உச்சரிக்குமாறு பணிப்பர். ஆனால் நாம் அந்த வேத எழுத்துகளின் ஒலியை மட்டும் உள்வாங்கி, அதனை எமக்கு தெரிந்த அளவில் மெதுவாக உச்சரிப்போம். ஆனால் அந்த பங்சாட்சரத்திற்கான மற்திரச் சொல்லும், அந்த மந்திரச் சொல்லிற்கான பொருளும் எமக்கும் தெரிந்திருந்தால் வேத விற்பன்னர்களுடன் நாமும் இணைந்து பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிப்போம். 

அதுமட்டுமல்ல இந்த பஞ்சாட்சர மந்திரத்தை ஒரு குருவின் ஆசியோடு கற்று, சிவாலயங்களில் நீங்கள் உச்சரிக்கத் தொடங்கினால் அல்லது மனதில் தியானித்தால் உங்களுக்கான பலன் உடனே கிட்டும். 

நங் சிவயநம -  திருமணம் நிறைவேறும்

அங் சிவயநம - தேக நோய் நீக்கும்

வங் சிவயநம - யோக சித்திகள் பெறலாம்

அங் சிவயநம - ஆயுள் வளரும், விருத்தியாகும்

ஓம் அங் சிவாயநம - எதற்கும் நிவாரணம் கிட்டும்

கிவி நமசிவாய - வசிய சக்தி வந்தடையும்

ஹிரீம் நமசிவய - விரும்பியது நிறைவேறும்

ஐம் நமசிவய - புத்தி வித்தை மேம்படும்

நமசிவய - பேரருள், அமுதம் கிட்டும்

உங்யு நமசிவய - வியாதிகள் விலகும்

கிலிம் நமசிவய - நாடியது சித்திக்கும்

சிங் வந் நமசிவய - கடன்கள் தீரும்

நமசிவய வங் - பூமி கிடைக்கும்

சௌம் சிவாய - சந்தான பாக்கியம் ஏற்படும்

சிங் றிங் சிவயநம - வேதானந்த ஞானியாவார்

உங் றிம் சிவயநம - மோட்சத்திற்கு வழிவகுக்கு

அங் நங் சிவாய - தேக வளம் ஏற்படும்

அவ்வுஞ் சிவாயநம - சிவன் தரிசனம் காணலாம்

ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்

லங் ஸ்ரீம் நமசிவாய - தானிய விளைச்சல் மேம்படும்

ஓம் நமசிவய - வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங் உங் சிவய நம - வாழ்வு உயரும், வளம் பெருகும்

ஓம் ஸ்ரீம் சிவாய நம - சிர ரோகம் நீங்கும்

ஓம் அங் சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்

இனியாவது பஞ்சாட்ச மந்திரத்தின் பொருளை உணர்ந்து உச்ரிப்போம். சிவபெருமானின் ஆசியைப் பெறுவோம். 

தொகுப்பு சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்