தனது உறவினரொருவரின் வாகனத்துடன் மோதி, குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பன்றிக்கெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 


வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம், பனிக்கநீராவியடி பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் ஜெனனி என்ற 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் நேற்று பிற்கபல் வவுனியாவிற்கு வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு சென்று கொண்டிருக்கையில் பனிக்கநீராவியடி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த சிறிய ரக வானுடன் மோதியதில் படுகாயமடைந்து உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துவரும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிக்கநீராவியடி பகுதியில் இருந்து இவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற உறவினரின் எட்டு வயது ஆண் மகன் காலில் படுகாயமடைந்து விபத்துப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  

சிறிய ரக வாகனத்தினை இவரது உறவினரே செலுத்தி வந்துள்ளதுடன் குறித்த குடும்பப் பெண் உறவினரின் வாகனத்துடன் மோதியே உயிரிழந்தள்ளார். 


சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தைப் பொலிசார் வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.