க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் பாடசாலை பரீட்சார்த்திகளாயின் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாயின் பரீட்சைத் திணைக்களத்துக்கு நேரடியாக தபால் மூலமாகவும்  அனுப்பி வைக்க முடியும்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் எவ்வித விளக்கங்களும் பெற வேண்டுமாயின்  011 2784208, 011 2784537 என்ற தொலைபேசி இலக்கங்களையும் அல்லது 1911 என்ற அவசர எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.