இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்டெயார் குக் தனது அணித்தலைமையை  இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையடுத்து குக்கின் தலைமையின்  மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த காரணத்தால் இவர் அணித்தலைமையிலிருந்து இராஜினாமா செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

இங்கிலாந்து அணி சார்பாக 59 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள குக் அதில் 24 போட்டிகளில் வெற்றியை தேடித்தந்துள்ளார். இதில் 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரசித்திபெற்ற ஏசஷ் தொடரையும் இங்கிலாந்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.

அதுமாத்திரமின்றி 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குக் 11057 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் அடுத்த டெஸ்ட் தலைவராக ஜோ ரூட் தெரிவுசெய்யப்படலாம் என எதிர்பார்க்ப்படுகின்றது.