புலம்பெயர்ந்த பணியாளர்கள் இலங்கையில் உள்ள தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியை எளிதாக்குகிறது பான் ஏசியா வங்கி

23 Aug, 2023 | 01:01 PM
image

புலம்பெயர்ந்த இலங்கைப்  பணியாளர்கள்  வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய ஜீவநாடியாகும். வெளிநாடுகளில்  தொழில்  புரியும்  இலங்கையர்கள்  தங்கள் தாய்நாட்டில்  வாழும்  குடும்பத்தினருக்கு  பணம்  அனுப்புவதற்கு  தெரிவு  செய்யும்   நம்பகமான வங்கிகளில்  பான் ஏசியா வங்கி  முதலிடம்   பிடித்துள்ளது.    

அவர்கள் இலங்கையில் உள்ள தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பணம்  அனுப்புவதற்கு  எளிதான , சிக்கலற்ற, சட்டபூர்வ மற்றும்  பாதுகாப்பான  வழியாக   பான் ஏசியா வங்கி சேவையையே  தேர்ந்தெடுக்கின்றனர். தாங்கள் தொழில்புரியும்  நாடுகளில் உள்ள  பான் ஏசியா வங்கியின் பங்காளிகளான   வெஸ்டர்ன் யூனியன், ரியா அல்லது ஸ்மோல் வேர்ல்ட் ஆகிய ஏதேனும் ஒன்றின் மூலமாக தங்கள் பணத்தை இலங்கைக்கு  அனுப்புகின்றனர். 

பான் ஏசியா வங்கியின் வங்கி காப்பீடு மற்றும் பணம் செலுத்துகை பிரிவின்  பிரதான முகாமையாளர்  திரு. யோஹான் ஈபெல் கூறுகையில், “இலங்கையிலிருந்து  தமது குடும்பங்களுக்காக உழைப்பதற்காக  வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள்  அரும்பாடுபட்டு  சம்பாதிக்கும்  பணத்தை  இலங்கைக்கு அனுப்புவதற்கான பாதுகாப்பான வழியை வழங்குவதில் உண்மையிலேயே இலங்கை வங்கி என்ற வகையில் பான் ஏசியா வங்கி, பெருமை  கொள்கிறது . 

தேசத்தின் பொருளாதார மீட்சிக்கான  தேவை  ஏற்பட்டுள்ள  இந்த  இக்கட்டான  காலகட்டத்தில்  விலைமதிப்பற்ற அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டு வருவதில் பான் ஏசியா வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. எங்கள் கிளைகள் மூலோபாய ரீதியாக நாடு முழுவதும் எளிதாக அணுகக்கூடிய வகையில் அமைந்திருப்பதால்  எங்களின் பணப்  பரிமாற்றக் கூட்டாளர்களின் பயன்பாட்டை வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப்  பணியாளர்களுக்கு   மேலும் விரிவுபடுத்துவதில்  எங்களது  உடனடி  கவனத்தை  செலுத்தவுள்ளோம்”

பான் ஏசியா வங்கி வெஸ்டர்ன் யூனியனுடன் தனது கிளை வலையமைப்பின்  மூலம் கணக்கில்  வரவிடல்  மற்றும் கருமபீட பணப் பெறுகை   ஆகிய இரண்டு செயற்பாடுகளுக்கும் இடமளிக்கிறது.  ரியா, அதன் கிளை வலையமைப்பின் மூலம் கருமபீட பண பெறுகைக்கு  இடமளிக்கிறது. ஸ்மோல் வேர்ல்ட் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பணப் பரிமாற்றங்களுக்கு கணக்கில்  வரவிடல் வசதியை வழங்குகிறது. அன்சாரி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து அனுப்பும் பணத்துக்கு மட்டும் கணக்கில்  வரவிடல் வசதியை வழங்குகிறது.   டெர்ராபே உலகின் எப்பகுதியில் இருந்தும் அனுப்பப்படும் பணத்துக்கும் கணக்கில்  வரவிடல் வசதியை வழங்குகிறது.

மேலும், பான் ஏசியா வங்கியின் மூலம் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வங்கி புதிய வெகுமதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மாதாந்தம் 50,000 ரூபா பெறுமதியான பரிசு வவுச்சர்களைப் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தச் சலுகை 31 டிசம்பர் 2023 வரை தொடரும்.

நாட்டின் உண்மையான இலங்கை வங்கி என்ற வகையில், பான் ஏசியா  வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவதுடன் அவர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் வாழ்க்கைக்கு மேலும் பெறுமதியை  சேர்க்க முயற்சிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Fems H.E.R. மையத்தினால் இலங்கையின் பெண்களுக்கு...

2023-09-18 19:45:01
news-image

இலங்கையில் அதிகம் விரும்பப்படும் மிகச்சிறந்த 10...

2023-09-12 10:07:55
news-image

புதிய வளாகத்துடன் கூட்டாண்மை வங்கியியல் அனுபவத்தை...

2023-09-11 16:36:47
news-image

மக்கள் வங்கி 2 மில்லியனுக்கும் அதிகமான...

2023-09-11 16:43:37
news-image

"லிபேரா ஜூனியர்" பிரமாண்டமான வெளியீட்டு விழா

2023-09-11 11:20:19
news-image

சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள்...

2023-09-04 12:21:42
news-image

தரத்திற்கான அங்கீகாரம் : IDL இன்...

2023-08-31 20:07:15
news-image

ரூபா 9.4 பில்லியன் தொகையை வரிக்கு...

2023-08-31 16:56:39
news-image

யாழ்ப்பாணத்தின் அழகை உலகுக்கு எடுத்துச் செல்லும்...

2023-08-31 21:54:09
news-image

குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவோம் :...

2023-08-25 15:40:33
news-image

இலங்கை காப்புறுதியாளர்கள் சங்கத்தின் இரத்த தானம்

2023-08-25 11:13:04
news-image

மக்கள் வங்கி, சர்வதேச இளைஞர் தினத்தில்...

2023-08-24 21:20:43