கிழக்கில் கடந்த 15 நாட்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 5 பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தம்

23 Aug, 2023 | 11:22 AM
image

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸாருக்குரிய ஒழுக்கம் தவறிச் செய்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (23) பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து, தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் வெளிவந்த  அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, கடந்த 11ஆம் திகதி ஏறாவூரைச் சோந்த இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலை பார்த்துவரும் கடையில் வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்புவதற்காக இரவு 11 மணியளவில் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். 

அவ்வேளை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 3 பொலிஸார் இளைஞரை நிறுத்தி, அச்சுறுத்தி, அவரிடம் இருந்து 6500 ரூபாவை பறித்தெடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸார் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதனையடுத்து, அந்த 3 பொலிஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

மேலும், கடந்த 20ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றிவந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில், அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். 

இவ்வாறு குற்றச் செயல்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு, பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய பாராளுமன்றத்துக்காவது அனுபவம் மிக்கவர்களை மக்கள்...

2024-11-03 21:43:03
news-image

வவுனியாவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக்கூட்டம்!

2024-11-03 21:51:43
news-image

தொழிற்சங்கங்களை இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு...

2024-11-03 21:41:21
news-image

லொஹான் ரத்வத்த பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்...

2024-11-03 20:45:01
news-image

ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது -...

2024-11-03 19:46:53
news-image

மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு நீக்கப்பட்டதா?...

2024-11-03 19:33:58
news-image

மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஜனாதிபதி...

2024-11-03 20:53:28
news-image

1,700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என...

2024-11-03 20:52:45
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,408...

2024-11-03 17:32:08
news-image

மது போதையில் தாயையும் சகோதரியையும் கூரிய...

2024-11-03 17:11:21
news-image

வன்முறையற்ற தேர்தல் கலாசாரம் உருவாகிறது -...

2024-11-03 16:40:17
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2024-11-03 16:15:12