போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரியும் இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

23 Aug, 2023 | 11:32 AM
image

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் வழங்கியதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தவரின் தாயார் வருகை தந்து வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்தார்.

இச் சம்பவத்தில், வவுனியா, மகாறம்பைக்குளம் காந்தி வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் (தீபன்) என்பவரே உயிரிழந்தவராவார்.  இவரது இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று செவ்வாய்க்கிழமை பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது, சடலத்தை எடுத்து வந்த அக் கிராம மக்களும், கிராம பொது அமைப்புக்களும் சடலத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், இறந்தாவருக்கு நீதி கோரியும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'ஐஸ் - கஞ்சா-  மாபா- ஹெரோயின் - போதை மாத்திரை என்பவற்றை தடை செய், தொடர்ச்சியாக அடாவடித்தனம் செய்வோரை கைது செய், மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை தடை செய்' என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான...

2025-01-22 12:41:05
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

தேங்காய் தட்டுப்பாடு ; அரசாங்க தலையீட்டை...

2025-01-22 12:46:42
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45
news-image

மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன்...

2025-01-22 11:08:50