‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வை இன்று மாலை நேரலையில் இஸ்ரோ ஒளிபரப்புகிறது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3-ன் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இந்த நிகழ்வைக் காண உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
’சந்திராயன்-3’-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சி இன்று மாலை 5.20 மணி முதல் இஸ்ரோவின் இணையதளம், இஸ்ரோ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் அரசு தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி விக்ரம் லேண்டர், நிலவை 70 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM