உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையை நிராகரிக்கும் பெண்கள் உரிமை அமைப்புக்கள்

Published By: Vishnu

22 Aug, 2023 | 10:01 PM
image

(நா.தனுஜா)

இலங்கை அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையை நிராகரிப்பதாகத் தெரிவித்திருக்கும் பெண்கள் உரிமை அமைப்புக்கள், இச்செயன்முறையின் ஊடாக கடன்களை மீளச்செலுத்துகை சுமை தொழிலாளர் வர்க்கத்தின்மீது சுமத்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளன. 

அதுமாத்திரமன்றி நாடு முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்கு மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான நிலைபேறானதொரு தீர்வை உடனடியாக வழங்குமாறும் அவ்வமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

 'கடனும் பெண்களின் மனித உரிமைகளும்' என்ற தலைப்பில் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கை உள்ளடங்கலாக ஆசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்ததுடன், நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடியினால் தமது அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் அதனை உரியவாறு கையாள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்காமை என்பன பற்றிய தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

 அத்தோடு இவ்விவகாரத்தில் குறிப்பாக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் வரலாற்று ரீதியான மற்றும் தற்கால வகிபாகத்தையும் அவர்கள் கேள்விக்குட்படுத்தினர். 

'சாதாரண தொழிலாளர்களின் சமூகப்பாதுகாப்பு நிதியங்கள் கடன்களை மீளச்செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையைப் பொறுத்தமட்டில் மிகவும் கடின உழைப்பாளர்களாக இருப்போரின் ஒரேயொரு சேமிப்பாக இருக்கக்கூடிய நிதியத்தையே அரசாங்கம் ஈடுவைத்திருக்கின்றது.

உள்ளகக் கடன்மறுசீரமைப்பு விவகாரத்தில் பாரிய மீறல்கள் இடம்பெறுகின்றன. இம்மறுசீரமைப்புச் செயன்முறை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது தொழிலாளர்கள் அவர்களது பாதுகாப்பு நிமித்தமான சேமிப்பை இழந்துவிடுவார்கள்' என்று சுட்டிக்காட்டிய அவர்கள்,  தற்போதைய கடன்நெருக்கடிக்கு மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான நிலைபேறானதொரு தீர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தினர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டனால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்...

2024-05-28 10:18:03
news-image

முல்லைத்தீவு, தியோநகர் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக...

2024-05-28 09:33:27
news-image

தொழில்நுட்ப கோளாறு ; பிரதான மார்க்கத்தில்...

2024-05-28 09:52:59
news-image

மட்டு. வெல்லாவெளியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின்...

2024-05-28 09:15:56
news-image

பசறையில் குளவி கொட்டுக்கு இலக்கான நபர்...

2024-05-28 09:05:45
news-image

இன்றைய வானிலை 

2024-05-28 07:07:30
news-image

இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு...

2024-05-28 06:11:06
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பாரிய...

2024-05-28 06:10:04
news-image

ஆகஸ்ட் மாதத்துக்குள் அரச நிறுவனங்களை தனியார்...

2024-05-28 06:09:07
news-image

அலி சப்ரி ரஹீமுக்கும் புத்தளம் பிரதேச...

2024-05-28 06:00:41
news-image

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கிற்கு சமாதானத்தின்...

2024-05-28 02:35:28
news-image

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என...

2024-05-28 02:06:22