இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் டிக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரின் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்துள்ளதெனவும், அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இலங்கை அணி இழந்துள்ள நிலையில், இருபதுக்கு-20 தொடரை மாத்திம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.