மாத்தளையில் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன் மாறாக அரசியல் செய்யவில்லை - ஜீவன்

Published By: Vishnu

22 Aug, 2023 | 07:44 PM
image

மாத்தளையில் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன். மாறாக அரசியல் செய்யவில்லை. மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. எனவே, மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 

தேர்தல் காலத்தில் வேண்டுமானால் அவர்களுக்கு தேவையான கட்சிகளில் வாக்கு கேட்கட்டும் - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, 

"மலையக பெருந்தோட்ட நிறுவனங்களே கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. மாறாக எமது மக்கள் அல்லர். எனினும், மக்களையும் குத்தகைக்கு எடுத்தவர்கள்போலவே கம்பனிகாரர்கள் செயற்பட்டுவருகின்றனர். இதற்கு அனுமதி வழங்க முடியாது. மக்களின் பிரதிநிதியாகவே நான் அங்கு சென்றேன். எனவே, இது விடயத்தில் பிரித்துபேச வேண்டாம்.

மலையக மக்களுக்கான காணி உரிமை பற்றி பேசப்படுகின்றது. ஜனாதிபதியிடம் இதனை வலியுறுத்தியுள்ளோம். 10 பேர்ச்சஸ் வழங்குவதற்கான நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. எனவே, இணைந்து செயற்பட்டு எமது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம்.

என்னைவிட அனுபவம்மிக்க மலையக அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால் என்னால் முடிந்தவற்றை நான் செய்துவருகின்றேன். முன்னோக்கி செல்வதற்கான ஆலோசனைகளைக் கூறுங்கள்.

ஜனாதிபதியுடன் கடந்த 11 ஆம் திகதி சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்கவில்லை. 12 ஆம் திகதி நடைபெற்ற நடை பயணம் இதற்கு காரணம் கூறப்பட்டது. 

என்னால் முடிந்த விட்டுக்கொடுப்புகளை நான் செய்துள்ளேன் .முற்போக்கு கூட்டணியின் மேடையில்கூட ஏறினேன். மாத்தளையில் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன். மாறாக அரசியல் செய்யவில்லை.

மலையக பகுதிகளில் சிங்கள, முஸ்லிம் எம்.பிக்களும் உள்ளனர். அவர்களும் பேச்சுக்கு வர வேண்டும்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம்:...

2026-07-10 19:51:18
news-image

67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது...

2026-07-10 19:26:46
news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல்...

2026-07-10 19:13:12
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12
news-image

களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும்...

2026-07-10 16:52:31
news-image

சிறைச்சாலையில் மோதல் : அமைச்சரின் திட்டமிடல்...

2026-07-10 16:51:57
news-image

நாமல் ராஜபக்ஷ ‘ஏ – டீம்...

2026-07-10 16:51:18
news-image

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரித்து பேராதனை வைத்தியர்கள்...

2026-07-10 16:39:41