தாய்லாந்தின் புதிய பிரதமராக  ஸ்ரேத்தா தவிசின் தெரிவு

Published By: Vishnu

23 Aug, 2023 | 09:42 AM
image

தாய்லாந்தின் புதிய பிரதமராக பியூ தாய் கட்சியின் ஸ்ரேத்தா தவிசின் அந்நாட்டுப் பாராளுமன்றத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த மே 14 ஆம் திகதி தாய்லாந்து பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற போதிலும், பல மாத கால இழுபறியின் பின்னர் அந்நாட்டின் 30 ஆவது பிரதமர் தெரிவாகியுள்ளார்.

500 ஆசனங்கள் கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத்துக்கான தேர்தலில் முன்னோக்கிச்  செல்லும் கட்சி  151 ஆசனங்களையும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவின் மகள் பயிதோங்தார்ன் ஷினவாத்ரா தலைமையிலான பியூ தாய் கட்சி 141 ஆசனங்களையும் பெற்றிருந்தன.

தாய்லாந்து பிரதமராக தெரிவாகுவதற்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் 500 உறுப்பினர்கள் மற்றும் 250 செனட் உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற வேண்டும். தற்போதைய செனட் உறுப்பினர்கள் இராணுவ ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள்.

இந்நிலையில்,  மன்னராட்சி தொடர்பான சட்டங்களை மறுசீரமைக்கப் போவதாக வாக்குறுதி அளித்ததால் முன்னோக்கிச் செல்லும் கட்சியின் தலைவர் பீதா லீம்ஜாரோன்ராத் பிரதமராகுவதற்கு 13 செனட்டர்கள் மாத்திரமே ஆதரவளித்தனர்.

இதையடுத்து, முன்னோக்சிச் செல்லும் கட்சி உட்பட 14 கட்சிகள் இணைந்து பிரதமர் வேட்பாளராக ஸ்ரேத்தா தவிசினை நிறுத்தின. நேற்று நடைபெற்ற தேர்தலில் தவிசின் மாத்திரமே வேட்பாளராக போட்டியிட்டார்.


இத்தேர்தலில்  ஸ்ரேத்தா தவிசினுக்கு ஆதரவாக 330 எம்.பிகள், 152 செனட்டர்கள் உட்பட  482 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 165 பேர் வாக்களித்தனர். 81 பேர் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.
60 வயதான ஸ்ரேத்தா தவிசின் கோடீஸ்வர வர்த்தகர் ஆவார். தற்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32
news-image

உக்ரைன் யுத்தம் - ஏவுகணை தாக்குதலில்...

2024-02-22 10:51:12
news-image

கொவிட்தடுப்பூசிகளால் பல உடல்பாதிப்புகள் -சர்வதேச அளவில்...

2024-02-21 16:44:52
news-image

டெல்லி சலோ போராட்டம்: கண்ணீர் புகை...

2024-02-21 14:01:03
news-image

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் சிறுவர்கள்...

2024-02-21 12:02:00
news-image

காசாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு...

2024-02-21 11:36:09