சந்திராயன் அனுப்பிய முதல் படம்: பிரகாஷ்ராஜ் கிண்டல் ட்வீட்

22 Aug, 2023 | 12:41 PM
image

இந்தியா விண்வெளிக்கு  அனுப்பிய  சந்திராயன் –3  விண்கலம் சந்திரனில் நாளை தரையிறங்கவுள்ள நிலையில் சந்திராயன் விண்கலம் சந்திரனில் எடுத்த முதல் படம் என தேநீர் ஆற்றும் ஒரு படத்தை தனது ட்வீற்றர் பக்கத்தில் போட்டு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்தின் உருவமே அது என்றாலும் அவர் தேநீர் ஆற்றும் படமானது இந்திய பிரதமர் மோடியை விமர்சிக்கும் ஒரு விடயம் என பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.  

பிரதமர் மோடி தனது சிறுவயதில் தேநீர் தயாரிக்கும் பணியில் இருந்தவர் என்பதை உலகமே அறியும். இருப்பினும் இந்திய அறிவியல் மற்றும் இந்தியாவின் கெளரவத்துக்கே நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கம் விளைவித்து விட்டார் என்றும் இது முற்று முழுதான ஒரு தேசத்துரோகம் என்றே அவரது ட்வீற்றருக்கு பதில்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

ஏனெனில் அமெரிக்கா ,ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப்பிறகு விண்வெளிக்கு ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ள விண்கலங்களை வெற்றிகரமாக அனுப்பும் ஒரு நாடாக இந்தியா உள்ளது. இது சர்வதேச அளவில் ஒரு கெளரவமாகும். அதை பிரகாஷ்ராஜ் கொச்சைப் படுத்தி விட்டார் என்பது இங்கு எழுந்துள்ள சர்ச்சை. 

பிரகாஷ்ராஜின் ட்வீற்றருக்கு அவரை தேசத்துரோகி என்றே பலரும் பின்னூட்டம் இட்டு வருகின்றனர். அவர் இதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் போட்டு வருகின்றனர். ஆனால் அவர் அசரவில்லை. 

இதற்கு தனது ட்வீற்றர் தளத்திலேயே பதில் கொடுத்துள்ள பிரகாஷ்ராஜ் 

"இது ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவை.  கேரள சாய்வாலாவை (கேரளாவில் தேநீர் தயாரித்து விற்கும் பணியை செய்பவர்கள்)  கொண்டாட இந்த பதிவை போட்டேன். உங்களுக்கு எந்த சாய்வாலா தெரிந்தார்? உங்களுக்கு நகைச்சுவை  புரியவில்லை என்றால், அந்த நகைச்சுவை உங்களை பற்றியதா வளருங்கள் " என பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார். 

வெறுப்பாக பார்த்தால் அனைத்தும் வெறுப்பாகவே பார்க்கப்படும் என்றும், நான் இந்த நகைச்சுவையினை நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் கால நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறேன் , நான் கேரளாவின் தேநீர் கடைக்காரர்களை கொண்டாடினேன். இந்த கேரளா தேநீர் கடைக்காரர்கள் குறித்த நகைச்சுவையினை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையென்றால், அதுதான் நகைச்சுவை எனவும் கூறியுள்ளார்.   பிரகாஷ் ராஜின் இப்பதிவு அனைத்துவித சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகிறது.

நடிகர் பிரகாஷ்ராஜ்  தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டிய பிறகு அதிகமாக பாரதீய ஜனதா கட்சியையும் பிரதமர் மோடியையும் அடிக்கடி விமர்சித்து வருகின்றார். அண்மையில் நடிகர் ரஜினி காந்த் உத்திரபிரதேச முதலமைச்சரை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவத்துக்கும் மோடியின் படத்தைப்போட்டு என்னிடம் கைகுலுக்கி கதைக்கும் ரஜினி அவரை ஏன் காலில் விழுந்து வணங்குகிறார் என சொல்வது போன்று பதிவிட்டிருந்தார். 

நிலவின் தென் துருவத்தை அடையும் நோக்கில் இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த 14 ஆம் திகதி ஏவியுள்ளது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அதேவேளை, விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாள  புதன்கிழமை  மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. 

இந்நிலையில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் இந்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பாரதீய ஜனதா கட்சி மாத்திரமல்லாது விண்வெளிக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக அனுப்புவதில் ஒத்துழைப்பு நல்கிய அனைவரையும் அதே வேளை இந்த திட்டத்தால் பெருமைப்படும் அனைத்து இந்தியர்களையும் பிரகாஷ்ராஜ் அவமானப்படுத்தி விட்டார் என்றே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42
news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16