நுகர்வுக்குப் பொருத்தமற்ற பூச்சிகள் அடங்கிய ஒரு தொகை அரிசியை வெலிப்பன்ன பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வெலிப்பன்ன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த சில்வாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வலகெதர பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் சுமார் 600 கிலோ பூச்சிகள் அடங்கிய அரிசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மத்துகம வலகெதர பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலைக்கு இவ்வாறான பூச்சிகள் அடங்கிய அரிசியை இந்த லொறி வழமையாக கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், களஞ்சியசாலைக்கு அருகில் வைத்து லொறியை சோதனையிட்டபோது இந்த அரிசித் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட அரிசியை பரிசோதிப்பதற்காக மத்துகம வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் அழைத்து வரப்பட்டு சோதிக்கப்பட்டதில் அரிசி பாவனையில் இருந்து நீக்கப்பட்டதுடன், அதில் அதிகளவான பூச்சிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM