(எம்.வை.எம்.சியாம்)
முறையான அனுமதி பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 16 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராஜகிரிய, கலபலுவாவ புட்கமுவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ருமேனியாவில் வேலைவாய்ப்புத்தருவாகக்கூறி 813,000 ரூபாவை பெற்று, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுத் தரவில்லை என கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக சந்தேக நபருக்கு எதிராக பணியகத்திற்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மேலும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அவர் பல்வேறு நபர்களிடமிருந்து 8,390,000 ரூபாவை பெற்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா 5 இலட்சம் ரூபா 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் செல்வதற்காக பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் தனிநபர் அல்லது நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல்களை உத்தியோகபூர்வ இணையதளமான www.slbfe.lk பார்வையிட முடியும்.
மேலும் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சட்டரீதியான உரிமம் முகவர்களிடத்தில் உள்ளதா மற்றும் அதற்கான அனுமதி நிறுவனம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும், மோசடிகளை தெரியப்படுத்தவும் 1989 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM