மருந்தகத்தினால் வழங்கப்பட்ட தவறான மருந்து பெண்ணின் உயிரை பறித்ததா? பொலிஸ் விசாரணை ஆரம்பம்

Published By: Rajeeban

22 Aug, 2023 | 06:41 AM
image

மருந்தகத்தினால் வழங்கப்பட்ட தவறான மருந்தினை பயன்படுத்தியதால் பெண் உயிரிழந்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்கிரியவில் 62 வயது பெண்ணொருவர் மருந்தகத்தினால் வழங்கப்பட்ட தவறான மருந்தினை பயன்படுத்தியமையால் உயிரிழந்தமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஜூலை மாதம் 31 ம் திகதி மருந்தினை வாங்கிய பெண் ஐந்து நாட்கள் அதனை பயன்படுத்திய பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் ஹொரன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்,அங்கு ஞாயிற்றுக்கிழமை அவர்  உயிரிழந்தார்.

குடும்ப உறவினர்களின் வேண்டுகோள்களை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸார் இதனை தொடர்ந்து ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்,சிசிடிவிகளை ஆராய்வது மருந்தகத்திலிருந்தும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மருந்தகத்தினால் வழங்கப்பட்ட தவறான மருந்தே உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது- 

எனினும் குறிப்பிட்ட நாளில் அந்த நோயாளி மருந்தகத்திற்கு சென்றாரா உரிய நாளில் மருந்து வழங்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளதாக மருந்தகத்தினை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு நோயாளிக்கு புற்றுநோய் மருந்தினை மருந்தகம் வழங்கியதால்இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

62 வயது சோமாவதி ஹொரான வைத்தியசாலையில் தொடர்ச்சியா சிகிச்சை பெற்றுவந்தவர் 31 ம் திகதி அவரது கணவர்  மருந்துகளை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் ஆனால் அங்கு மருந்துகள் இல்லாததால் அவர் தனியார் மருத்துவமனையில் மருந்துகளை கொள்வனவு செய்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03