முல்லைத்தீவில் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்து போராட்டம்

Published By: Vishnu

21 Aug, 2023 | 08:16 PM
image

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வழி வகுத்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை மாற்றி மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணுங்கள் எனக் கூறி சபாநாயகர் இடம் கொடுக்க உள்ள மனுவுக்கு வலி சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் துண்டு பிரசுர விழிப்புணர்வு நடவடிக்கையும் புதுக் குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டின் பொதுமக்களின் சுகாதார சேவையின் பாதிப்பு தொடர்பான துண்டு பிரசுரம் அங்கு வருகை தந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்களிடமிருந்து கையெழுத்து பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் முத்துகுமாரசாமி லக்சயன் தலைமையில் இந்த கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது இதன்போது புது குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சத்திய சத்தியசுதர்சன் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர் மக்கள் இதில் கையெழுத்துவைத்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

2026-03-16 13:38:22
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று...

2026-03-16 13:29:28
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு...

2026-03-16 12:28:59
news-image

சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது;...

2026-03-16 12:59:01
news-image

நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்...

2026-03-16 12:53:47
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் :...

2026-03-16 12:34:37
news-image

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்; பொதுமக்களுக்கு...

2026-03-16 12:32:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: ஜனாதிபதியின் அதிரடித்...

2026-03-16 11:13:17
news-image

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி குறித்து...

2026-03-16 12:14:29
news-image

எரிபொருள் வரிசைகளுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடவோ...

2026-03-16 10:47:31
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் அதிரடிச் சோதனை:...

2026-03-16 10:13:44
news-image

காட்டு மரையை வேட்டையாடிய இருவருக்கு விளக்கமறியல்

2026-03-16 11:12:07