அம்பிளிக்கல் கிரானுலோமா எனும் பாதிப்பிற்குரிய எளிய சிகிச்சை

21 Aug, 2023 | 04:30 PM
image

இன்றைய திகதியில் வைத்தியசாலையில் குழந்தைகள் பிறக்கும் போது பிள்ளைக்கும், அவருடைய தாயாருக்கும் இடையே இருக்கும் பிளசன்டா எனப்படும் நஞ்சு கொடியை பாதுகாப்பாக அகற்றுவர். 

பொதுவாக குழந்தைகளின் தொப்புள் பகுதியில் இருக்கும் இத்தகைய முடிச்சு, எட்டு நாட்களில் தானாக உலர்ந்து உதிர்ந்து விடும். 

சில பிள்ளைகளுக்கு அதாவது 500 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு நஞ்சுக்கொடி வெட்டி பாதுகாப்பாக முடிச்சிட்ட பிறகும் அதிலிருந்து ஈரக் கசிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கும். 

இதனை மருத்துவ மொழியில் அம்பிளிக்கல் கிரானுலோமா என குறிப்பிடுவர். இதற்கு தற்போது எளிய வழிகளில் சிகிச்சையை மேற்கொண்டு முழுமையாக குணப்படுத்த இயலும் என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்த எட்டு நாட்களில் அவர்களுடைய தொப்புள் கொடி இயல்பான நிலைக்கு திரும்பிவிடும்.

 திரும்பவில்லை என்றால், உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். 

பொதுவாக இத்தகைய அம்பிளிக்கல் கிரானுலோமா எனும் பாதிப்பினை மருத்துவர்கள் கண்டறிந்தால், அவர்களுக்கு ஆல்கஹால் ஸ்வாப் எனும் சிகிச்சையை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிப்பார். 

வேறு சில மருத்துவர்கள் இத்தகைய தருணங்கள் பிரத்தியேக உப்பு அல்லது தாது கரைசலையோ அல்லது பிரத்யேக வேதியல் உப்பையோ பயன்படுத்தி இதற்கு நிவாரணம் வழங்குவர்.  

குழந்தைக்கு நஞ்சுக்கொடி வளர்ந்து உதிர்ந்த பிறகும், தொடர்ந்து பத்து நாட்கள் வரை மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். 

இது தொடர்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அறிவுரைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும். இதை புறக்கணித்தால் குழந்தைக்கு தொப்புள் வழியாக தொற்றுகள் பரவக்கூடிய அபாயம் உண்டு.

டொக்டர் தனசேகர்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்மறை எண்ணங்களை அகற்ற உதவும் நரம்பியல்...

2024-07-22 17:19:21
news-image

பால், பால்மா, பாற்பொருட்களால் ஏற்படும் லாக்டோஸ்...

2024-07-20 18:21:12
news-image

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுவது...

2024-07-19 17:33:29
news-image

கல்லீரல் சுருக்க பாதிப்பால் உண்டாகும் ரத்த...

2024-07-19 17:27:13
news-image

ஃபிஸர் எனும் ஆசன வாய் வெடிப்பு...

2024-07-17 17:23:03
news-image

கெலாய்டு வடு பாதிப்பை அகற்றும் நவீன...

2024-07-16 14:41:29
news-image

முடி அகற்றுவதற்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2024-07-15 17:07:51
news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12