காதலியை கரம்பிடித்த நடிகர் கவின்

21 Aug, 2023 | 04:41 PM
image

நடிகர் கவினுக்கும், அவருடைய நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டிற்கும் திருமணம் நடைபெற்றது.

சின்னத்திரையில் அறிமுகமாகி, வண்ணத்திரையில் பிரபலமானவர் நடிகர் கவின் இவர் நடிப்பில் அண்மையில் படமாளிகையில் வெளியான 'டாடா' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

அதற்கு முன் இவர் நடிப்பில் டிஜிட்டல் தளத்தில் வெளியான 'லிஃப்ட்' எனும் திரைப்படமும் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. 

தற்போது முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் இவருக்கும், இவருடைய நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட் என்பவருக்கும் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் திருமண நிச்சயம் நடைபெற்றது. 

இது தொடர்பான அறிவிப்பை அவர் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் பங்கு பற்றினர்.

பிக் பொஸ் மூலம் புகழ்பெற்ற கவினுக்கு அவருடைய நண்பரும், நடிகருமான விஜய் டிவி புகழ் திருமண நிகழ்வில் பங்கு பற்றி வாழ்த்து தெரிவித்தார். இவருடன் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்