குஜராத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் 27 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தனது 27 வார கருவை கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஆகஸ்ட் 19 உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை காரணமாக கருவுற்ற பெண்ணின் கருவை கலைக்க அனுமதி மறுத்த குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் புதிய மருத்துவக் குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட பெண் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து, ஆகஸ்ட் 20ஆம் தேதி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்யலாம் என மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ள அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவக் குழு கருக்கலைப்பு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது, அதன் அடிப்படையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், ஏன் குஜராத் உயர்நீதி மன்றம் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகிறது? கருக்கலைப்பு தொடர்பான விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை குஜராத் நீதிமன்ற நீதிபதி ஏன் மதிக்கவில்லை என்றும் அவர்கள் வினவினர். இந்த உத்தரவில் ஏதோ (clerical) பிழை உள்ளதாகவும், வழங்கப்பட்ட உத்தரவை திரும்பப்பெற நீதிபதியிடம் அறிவுறுத்துவோம் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
இதனையடுத்து உரிய சிகிச்சை வழிமுறைகளோடு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மனுதாரர் இன்று அல்லது நாளை காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். கருக்கலைப்பு செய்யும் அதே சமயம் குழந்தை உயிருடன் இருந்தால் அதை மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் வளர்க்க வேண்டும் எனவும் குஜராத் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM