இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றும், உலகளாவிய Allianz SE குழுமத்தின் அங்கத்துவம் பெற்றதுமான Allianz Lanka நிறுவனம், நிட்டம்புவவில் உள்ள தனது கிளையை இடமாற்றம் செய்வதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது.
இந்நிறுவனத்தின் புதிய கிளையானது நவீன வசதிகள் மற்றும் வடிவமைப்பைக் கொண்டுள்ளதோடு, வாடிக்கையாளர் வரவேற்பு இடங்களில் தடையற்ற உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்காக இந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு இசைவாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கிளையில் Allianz இன் ஆயுள் மற்றும் பொது காப்புறுதி பிரிவுகள் இயங்கும்.
கடந்த ஜூலை 5 ஆம் திகதி இடம்பெற்ற விசேட விழாவின் போது புதிதாக இடம் மாற்றப்பட்ட கிளை திறக்கப்பட்டமை Allianz Lanka ஆனது அதன் விநியோக மூலோபாயத்திற்கான ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
அதன்படி, Allianz Lanka - Nittambuwa இலக்கம் 570C, Colombo Rd, Nittambuwa இல் பரந்த வாகனத் தரிப்பிடத்துடன் இலகுவாக அணுகக்கூடிய வகையில் மக்கள் அடிக்கடி நடமாடும் ஒரு முக்கிய இடத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Allianz Insurance Lanka Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் இலங்கைக்கான முகாமையாளர் - அலன் ஸ்மீ, Allianz Life Insurance Lanka Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி - ஜயலால் ஹேவாவசம், பிரதம விநியோக அதிகாரி - ரங்க டயஸ், தேசிய விற்பனைத் தலைவர் - ஜயநாத் அல்விஸ், முகவர் நிறுவனத்தின் தலைவர் - சமில அமுனுகம, மற்றும் தலைவர்-சந்தைப்படுத்தல் - கசுன் யட்டவர ஆகியோர் இந்த நிகழ்வில் பங்குபற்றியமையானது இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றதோடு, இப்பிரதேசத்தில் Allianz Lanka வின் நன்மதிப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.
Allianz Lanka வின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகள் யாவும் செயற்படவும், நிறுவனத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் ஏற்றவகையிலும், உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப தன்னை உயர்த்திக்கொள்வதற்கும் இந்த இடமாற்றம் ஒரு முக்கிய நகர்வாக அமைகின்றது.
அதன் ஓம்னிசேனல் சேவை விநியோக உத்தியின் ஒரு பகுதியாக, Allianz Lanka நிறுவனமானது அதன் அனைத்து கிளைகளிலும் சீரான தோற்றம் உணர்வு ஆகியவற்றைப் பராமரிக்க உறுதிபூண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாம் விரும்பும் அணுகலைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து சிறப்பான அனுபவத்தையும் உயர்தர சேவைகளையும் பெறுவதை இந்நகர்வு உறுதி செய்கிறது.
Allianz Insurance Lanka Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் இலங்கைக்கான முகாமையாளரான அலன் ஸ்மீ நிறுவனத்தின் கிளை இடமாற்றம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், "இன்றைய போட்டிச் சந்தையில் நிலையான வர்த்தகநாம அனுபவத்தை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது.
எனவே, நாம் எமது கிளை அனுபவத்தை தரப்படுத்துவதன் மூலம், எமது இருப்பை வலுப்படுத்த முயற்சிப்பதோடு, எமது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த காப்பீட்டு சேவைகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறோம். எமது இந்தப் புதிய இருப்பிடத்தைப் பார்வையிடவும், நாங்கள் வடிவமைத்த்துள்ள புதிய அனுபவத்தை அனுபவிக்கவும் எமது வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் ஊக்குவிக்கிறோம்."
Allianz Life Insurance Lanka Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெயலால் ஹேவாவசம் மேலும் கருத்து தெரிவிக்கையில், “Allianz Lanka இல், இணையற்ற வாடிக்கையாளர் சேவை மற்றும் சிறந்த காப்புறுதி தீர்வுகளை வழங்குவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.
எமது நிட்டம்புவ கிளையின் இடமாற்றத்தின் ஊடாக, எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் நவீன மற்றும் கவர்ச்சிகரமான சூழலை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்."
Allianz Lanka என கூட்டாக அறியப்படும் Allianz Life Insurance Lanka Ltd. மற்றும் Allianz Insurance Lanka Ltd. ஆகியவை ஜெர்மனியின் Munich நகரைத் தலைமையிடமாகக் கொண்ட காப்புறுதி மற்றும் சொத்து மேலாண்மை வணிகங்களில் முதன்மையாகச் சேவைகளைக் கொண்ட உலகளாவிய நிதிச் சேவை வழங்குநரான Allianz SE க்கு முழுச் சொந்தமான துணை நிறுவனங்களாகும். Allianz குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் உறுதியான மூலதனமயமாக்கல் மற்றும் உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவு ஆகியவை, Allianz Lanka வின் வெற்றிக்கான சக்திவாய்ந்த சூத்திரமாக இருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM